About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 2 திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி தனியன்கள். Show all posts
Showing posts with label 2 திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி தனியன்கள். Show all posts

Thursday, 10 August 2023

திவ்ய ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி தனியன் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தனியன் 3

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை 
(இரு விகற்ப நேரிசை வெண்பா)

பாண்டியன் கொண்டாடப்* பட்டர்பிரான் வந்தானென்று* 
ஈண்டிய சங்கம் எடுத்து ஊத* 
வேண்டிய வேதங்கள் ஓதி* விரைந்து கிழி அறுத்தான்* 
பாதங்கள் யாமுடைய பற்று|

  • பாண்டியன் - ஸ்ரீ வல்லப தேவன் எனகிற பாண்டிய ராஜன்
  • கொண்டாட - மேன்மேல் ஏத்த
  • பட்டர்பிரான் - ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன்
  • வந்தான் என்று - எழுந்து அருளினான் என்று
  • ஈண்டிய - கூடின அநேகமான
  • சங்கம் எடுத்து - சங்குகளைக் கொண்டு
  • ஊத - அநேகர் சப்திக்க
  • வேண்டிய - அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய
  • வேதங்கள் - வேதார்தங்களை
  • ஓதி - தெரியச் சொல்லி
  • விரைந்து- தாமசியாமல்
  • கிழி - வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை
  • யறுத்தான் - அறுத்தவனுடைய
  • பாதங்கள் - திருவடிகளே
  • யாமுடைய - நாங்கள் ஆஸ்ரயமாக உடைய

பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் “நமக்குப் பரதத்வ நிர்ணயம் பண்ணிக் கொடுக்க பட்டர்பிரான் வந்தார்” என்று கொண்டாட, அங்கிருந்தவர்கள் சங்கங்களை முழங்கி வெற்றி கோஷமிடும்படி, வேதத்தில் தேவையான ப்ரமாணங்களை எடுத்து விளக்கி ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தை நிலை நாட்டி, பொற்கிழி அறுந்து விழும்படி செய்த பெரியாழ்வாரின் திருவடிகளே நமக்குத் தஞ்சம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Wednesday, 9 August 2023

திவ்ய ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி தனியன் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தனியன் 2

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை 
(இரு விகற்ப நேரிசை வெண்பா)

மின்னார் தட மதிள் சூழ்* வில்லிபுத்தூர் என்றொருகால்* 
சொன்னார்* கழற் கமலம் சூடினோம்* 
முன்னாள் கிழி அறுத்தான்* என்றுரைத்தோம்* 
கீழ்மையினில் சேரும்* வழி அறுத்தோம் நெஞ்சமே வந்து|

  • மின் - மின்னுதல் - மணிகளால் ஒளி விடுதல்
  • ஆர் - நிறைந்த அதிகமான
  • தடம் - அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள
  • மதிள் - திரு மதிளாலே
  • சூழ் - வளைக்கப்பட்ட 
  • வில்லி புத்தூர் என்று - ஸ்ரீ வில்லி புத்தூர் என்று
  • ஒரு கால் சொன்னார் - ஒரு தரம் உச்சரிதவருடைய
  • கழல் கமலம் - திருவடித் தாமரைகளை
  • சூடினோம் - விசேஷ புஷ்பமாக முடித்தோம்
  • முன்னாள் - புருஷார்த்தம் வெளியாக காலத்தில்
  • கிழி - பொருள் முடிப்பை
  • அறுத்தான் என்று - அறுத்து வெளி இட்டவர் என்று
  • உரைத்தோம் - சொல்லப் பெற்றோம் ஆகையால்
  • கீழ்மை - நரகத்தில்
  • இனி - இனிமேல்
  • சேரும் - முன் போல் செல்லுகிற
  • வழி - மார்க்கத்தை
  • அறுத்தோம் - அறப் பண்ணினோம்
  • நெஞ்சே - மனசே
  • வந்து - சம்ஸார ரஹீதராய் வந்து

நெஞ்சே! மின்னலைப் போலே ஒளிவிடும் பெரிய மதிள்களால் சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசத்தின் பெயரை ஒரு முறை சொன்னவர்கள் திருவடித் தாமரைகளை எங்கள் தலைக்கு ஆபரணமாகச் சூடுவோம். பெரியாழ்வார் முற்காலத்திலே மதுரை ராஜ ஸபையில் சென்று, தன்னுடைய வாதத்தினாலே பரிசாக இருந்த பொற்கிழியை அறுந்து தன் கையிலே விழச் செய்த பெரியாழ்வாரின் அற்புதச் செயலை நினைத்து, சொல்லி, அதனாலே தாழ்ந்த நிலைகளை அடைவதில் இருந்து எங்களைக் காத்துக் கொண்டோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Tuesday, 8 August 2023

திவ்ய ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி தனியன் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தனியன் 1

நாதமுனிகள் அருளிச் செய்தது

கு³ருமுக² மநதீ⁴த்ய* ப்ராஹ வே³தாந ஸே²ஷாந்* 
நரபதி பரிக்லுப்தம்* ஸு²ல்க மாதா³து காம:*
ஸ்²வஸு²ர மமர வந்த்³யம்* ரங்க³ நாத²ஸ்ய ஸாக்ஷாத்* 
த்³விஜ குல திலகம் தம்* விஷ்ணு சித்தம் நமாமி|

  • குருமுகம் - ஆசார்ய முகத்தாலே
  • அநதீத்ய - அப்யசிக்காமலே
  • ப்ராஹ - உபன்யசித்தாரோ
  • வேதான் - வேதங்களை
  • அசேஷான் - சமஸ்தமாகிய
  • நர பதி - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
  • பரிக்லிப்தம் - ஏற்படுத்தப்பட்ட
  • ஸூல்கம் - வித்யா சுல்கத்தை
  • ஆதாதுகாம - க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
  • ஸ்வஸுரம் - மாமனாரும்
  • அமர - தேவதைகளால்
  • வந்த்யம் - ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
  • ரங்க நாதஸ்ய - ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
  • ஸாஷாத் - பிரத்யஷமாய்
  • த்விஜகுல - ப்ராஹ்மண வம்சத்துக்கு
  • திலகம் - அலங்கார பூதருமாகிய
  • தம் விஷ்ணு சித்தம் - அந்த பெரியாழ்வாரை
  • நமாமி – சேவிக்கிறேன்

ஒரு குருவின் மூலமாகக் கற்காமல், திருமாலாலே நேராக (மயர்வற மதிநலம்) தெளிவான ஞானமும் பக்தியும் அருளப் பெற்ற விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார், மதுரையில், ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவின் ஸபையில் நடக்கும் வித்வான்களின் கோஷ்டியில் அங்கே இருக்கும் பரிசான பொற் கிழியை ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெரும் கோயில் உடையான் எம்பெருமானுக்கு ஆக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்று, எல்லா வேதங்களையும் எடுத்துரைத்து, அப்பரிசை வென்றார். மேலும் ஸ்ரீரங்கநாதனுக்குத் தன் திருமகளாரான ஆண்டாளை மணமுடித்துக் கொடுத்து, நித்ய ஸூரிகளாலும் எம்பெருமானுக்கு மாமனார் என்று வணங்கப்பட்டார். அந்தணர் குலத்தில் மிகச் சிறந்தவராக விளங்கினார். இப்படிப்பட்ட பெரியாழ்வாரை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்