||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அத² ஸ்தோத்ரம்
அத² - இப்போது தொடக்கம் (ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கும் போது பயன்படுத்தப்படும் மங்களகரமான சொல்)
ஸ்தோத்ரம் - கடவுளைப் போற்றிப் பாடும் துதிப்பாடல்
தே³வதா காரிய ஸித்³த்⁴யர்த²ம்
ஸ்பா⁴ஸ் தம்ப⁴ ஸமுத்³ப⁴வம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே||
- தே³வதா - தேவர்களுடைய
- காரிய - காரியங்களை, செயல்களை
- ஸித்³த்⁴ய அர்த²ம் - நிறைவேற்றுவதற்காக
- ஸ்பா⁴ ஸ்தம்ப⁴ - சபையின் தூணிலிருந்து
- ஸமுத்³ ப⁴வம் - தோன்றியவரை
- ஸ்ரீ - மங்களம் நிறைந்த லட்சுமி தேவியுடன் கூடிய
- ந்ருஸிம்ஹம் - நரசிம்ம மூர்த்தியை
- மஹா - மிகச் சிறந்த
- வீரம் - பராக்கிரமம் உடையவரை
- நமாமி - வணங்குகிறேன்
- ருண - பிறவி கடன்களிலிருந்து (பொருளுதவி கடன் மற்றும் பாவக் கடன்கள்)
- முக்தயே - விடுதலை பெறுவதற்காக
தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக, ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment