About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 21 September 2026

ஜடாயுவின் இராம ஸ்தோத்திரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

நிரவதி⁴ ஸுக² மிந்தி³ரா கடாக்ஷம் 
க்ஷபித ஸுரேந்த்³ர சதுர் முகா²தி து³:க²ம்| 
நரவர மநிஸ²ம் நதோஸ்மி ராமம் 
வரத³ மஹம் வர சாப பா³ண ஹஸ்தம்||

  • நிரவதி⁴ - எல்லையற்ற
  • ஸுக²ம் - ஆனந்தம்
  • இந்தி³ரா - திருமகள், இலட்சுமி
  • கடாக்ஷம் - அருட்பார்வை
  • க்ஷபித - நீக்கியவர்
  • ஸுரேந்த்³ர - தேவர்களின் தலைவன்
  • சதுர் முக² - நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மா
  • ஆதி - முதலியோரின்
  • து³ஃக²ம் - துன்பம்
  • நரவரம் - மனிதர்களில் சிறந்தவர்
  • அநிஸ²ம் - இடைவிடாமல், எப்பொழுதும்
  • நதோஸ்மி - வணங்குகிறேன்
  • ராமம் - இராமரை
  • வரத³ம் - வரம் அளிப்பவர்
  • அஹம் - நான்
  • வர - சிறந்த
  • சாப - வில்
  • பா³ண - அம்பு
  • ஹஸ்தம் - கையில் கொண்டவர்

திருமகளின் அருட்பார்வையால் எல்லையற்ற ஆனந்தத்தை உடையவரும், தேவேந்திரன், பிரம்மன் முதலியோரின் துன்பங்களை நீக்கியவரும், மனிதர்களில் சிறந்தவரும், கையில் சிறந்த வில்லையும் அம்பையும் ஏந்தியவரும், வரங்களை அருளுபவருமான இராமரை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment