About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 20 August 2026

ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி ஸ்லோகம் பலஸ்ருதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

ஆதி, தான்ய, தைரிய, கஜ, சந்தான, விஜய, வித்யா மற்றும் தன லட்சுமி ஆகிய எட்டு வடிவங்களின் அருளால் ஆயுள், ஆரோக்கியம், செல்வம் மற்றும் மனநிறைவு பெருகும். துன்பங்கள் நீங்குதல்: தரித்திரம், பயம் மற்றும் பாவங்கள் நீங்கி வீட்டில் என்றும் லட்சுமி கடாஷம் நிலைத்திருக்கும்.
ப²லஸ்²ருதி

  • அஷ்டலக்ஷ்மீ நமஸ்துப்⁴யம் 
  • வரதே³ காம ரூபிணி
  • விஷ்ணு வக்ஷ: ஸ்த²லா ரூடே⁴ 
  • ப⁴க்த மோக்ஷ ப்ரதா³யினி|
  • ஸ²ங்க³ சக்ர க³தா³ஹஸ்தே 
  • விஸ்²வ ரூபிணி தே ஜய:
  • ஜக³ன் மாத்ரே ச மோஹின்யை 
  • மங்கள³ம் ஸு²ப⁴ மங்கள³ம்|
  • அஷ்டலக்ஷ்மீ - தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகிய எட்டு வடிவங்களாக விளங்கும் லட்சுமி தேவியரே
  • நமஸ்துப்⁴யம் -  உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்
  • வரதே³ - வரங்களை அள்ளித் தருபவளே
  •  காம ரூபிணி - வேண்டிய வடிவங்களை எடுப்பவளே, அல்லது பக்தர்களின் நியாயமான ஆசைகளின் வடிவமாக இருப்பவளே 
  • விஷ்ணு - மகாவிஷ்ணுவின்
  • வக்ஷஸ் ஸ்த²ல - மார்பகப் பகுதியில்
  • ஆரூடே⁴ -  வீற்றிருப்பவளே, அமர்ந்திருப்பவளே 
  • ப⁴க்த - பக்தர்களுக்கு
  • மோக்ஷ - பிறவிப் பிணியில் இருந்து விடுதலையை, முக்தியை
  • ப்ரதா³யினி - வழங்குபவளே
  • ஸ²ங்க³ - சங்கு
  • சக்ர - சக்கரம்
  • க³தா³ - கதை ஆகிய ஆயுதங்களை 
  • ஹஸ்தே - கைகளில் ஏந்தியவளே
  • விஸ்²வ ரூபிணி - உலகமே வடிவமாகத் திகழும் தேவியே
  • தே - உனக்கு
  • ஜயஹ - வெற்றி உண்டாகட்டும்
  • ஜக³ன் - அகில உலகத்திற்கும்
  • மாத்ரே -  தாயாக விளங்குபவளே
  • ச - மேலும்
  • மோஹின்யை -  எல்லோரையும் கவரும் பேரழகு உடையவளே
  • மங்கள³ம் - நன்மைகள் உண்டாகட்டும்
  • ஸு²ப⁴ மங்கள³ம் - மிகவும் மேன்மையான சுபங்கள் பெருகட்டும்

வேண்டிய வடிவங்களை எடுப்பவளும், பக்தர்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றி வரங்களை அள்ளித் தருபவளுமாகிய தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகிய எட்டு வடிவங்களாக விளங்கும் லட்சுமி தேவியரே! உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள்.  மகாவிஷ்ணுவின் மார்பகப் பகுதியில் எப்போதும் நீங்காமல் வீற்றிருப்பவளே, உன்னை உருகித் தொழும் பக்தர்களுக்கு இந்தப் பிறவிப் பிணியில் இருந்து விடுதலையையும், அழியாத முக்தியையும் வழங்குபவள் நீயே ஆவாய். உன்னுடைய கைகளில் சங்கு, சக்கரம், கதை ஆகிய ஆயுதங்களை ஏந்தி, அகில உலகமுமே தன் வடிவமாகக் கொண்டு விஸ்வரூபமாய் விளங்கும் தேவியே, உனக்கு எப்போதும் வெற்றி மட்டுமே உண்டாகட்டும். இந்த மொத்த உலகத்திற்கும் தாயாக விளங்குபவளும், எல்லோரையும் கவரும் பேரழகு உடையவளுமாகிய உனக்கு நன்மைகளும், எப்போதும் மேன்மையான மங்களங்களும் பெருகட்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ த⁴ன லக்ஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

தி⁴மி தி⁴மி தி⁴ந்தி⁴மி தி⁴ந்தி⁴மி தி³ந்தி⁴மி
து³ந்து⁴பி⁴ நாத³ ஸுபூர்ண மயே
கு⁴ம கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம
ஸ²ங்க³ நினாத³ ஸுவாத்³ய நுதே|
வேத³ பூராணே திஹாஸ ஸு பூஜித
வைதி³க மார்க³ ப்ரத³ர்ஸ² யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
த⁴ன லக்ஷ்மி ரூபேணா ஸதா³ பாலய மாம்||

  • து³ந்து⁴பி⁴ - துந்துபி எனப்படும் ஒரு வகையான பெரிய முரசு, பேரிகை வாத்தியம்
  • நாத³ - ஓசையினால்
  • ஸுபூர்ண மயே - நிறைந்திருப்பவளே
  • கு⁴ம கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம - ஒலிக்கின்ற கெஜையின், சலங்கையின் ஓசைகள்
  • ஸ²ங்க³ - சங்கின்
  • நினாத³ - முழக்கத்தோடும்
  • ஸு வாத்³ய நுதே - மங்களகரமான பிற இசைக்கருவிகளின் ஒலியோடும் துதிக்கப்படுபவளே
  • வேத³ - வேதங்களாலும்
  • பூராண - புராணங்களாலும்
  • இதிஹாஸ - இதிகாசங்களாலும்
  • ஸு பூஜித - மிகச் சிறப்பாக வழிபடப்படுபவளே
  • வைதி³க - வேத நெறியான
  • மார்க³ - நல்வழியை
  • ப்ரத³ர்ஸ² யுதே - வழிகாட்டுபவளே 
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • த⁴ன லக்ஷ்மி ரூபேணா - தனலட்சுமி வடிவில் இருப்பவளே
  • ஸதா³ - எப்போதும்  
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

‘திமி திமி திந்திமி திந்திமி திந்திமி என்று துந்துபி முழங்கப் பூரண வடிவானவளே, குமகும குங்கும எனச் சங்கம் இனிமையோடு முழங்க, வேதங்களும், புராணங்களும் துதித்துப் போற்ற, வேத வழியில் நன்னெறி காட்டுபவளே, மதுசூதனின் ஆபரணமே, உன்னைத் தரித்திருப்பதால் நாராயணனும் பெருமை பெற்று விளங்குகிறான். எம்மைக் காத்து வாழ்விப்பவள் நீயே,’ என்று சொல்லி வழிபட்டால், நல்லவழியாகிய தர்ம நெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீ தன லக்ஷ்மி அருள் புரிவாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ வித்³யா லக்ஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

ப்ரணத ஸுரேஸ்²வரி பா⁴ரதி பா⁴ர்க³வி
ஸோ²க வினாஸி²னி ரத்ன மயே
மணி மய பூ⁴ஷித கர்ண விபூ⁴ஷண
ஸா²ந்தி ஸமாவ்ருத ஹாஸ்ய முகே²|
நவ நிதி⁴ தா³யினி கலி மல ஹாரிணி
காமித ப²லப்ரத³ ஹஸ்த யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
வித்³யா லக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்||

  • ப்ரணத -  வணங்குகின்றவர்களுடைய, சரணடைந்தவர்களுடைய
  • ஸுரேஸ்²வரி -  தேவர்களின் தலைவியே, தேவ தேவியே 
  • பா⁴ரதி -  கலைமகளின், ஸரஸ்வதியின் வடிவானவளே
  • பா⁴ர்க³வி - பிருகு மகரிஷியின் மகளே, லக்ஷ்மி தேவியே 
  • ஸோ²க - துக்கங்களை, துன்பங்களை 
  • வினாஸி²னி - முழுமையாக அழிப்பவளே
  • ரத்ன மயே - ரத்தினங்கள் நிறைந்தவளே
  • மணி மய - மணிகள், முத்துக்கள் பதிக்கப்பட்ட
  • பூ⁴ஷித -  அலங்கரிக்கப்பட்ட
  • கர்ண -  காதணிகளை
  • விபூ⁴ஷண - அணிந்திருப்பவளே
  • ஸா²ந்தி -  அமைதி, சாந்தம்
  • ஸமாவ்ருத -  நிறைந்த
  • ஹாஸ்ய முகே² - புன்னகை தவழும் முகத்தைக் கொண்டவளே
  • நவ நிதி⁴  - ஒன்பது வகையான செல்வங்களையும்
  • தா³யினி -  தருபவளே
  • கலி மல -  கலியுகத்தின் பாவங்களை, அழுக்குகளை
  • ஹாரிணி - போக்குபவளே
  • காமித -  விரும்பிய
  • ப²லப்ரத³ -  பலன்களை அளிக்கும்
  • ஹஸ்த யுதே - கைகளைக் கொண்டவளே
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • வித்³யா லக்ஷ்மீ -  கல்விச் செல்வத்தை அருளும் வித்யா லட்சுமியே
  • ஸதா³ - எப்போதும் 
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

தேவர்கள் துதிக்கும் தலைவியே, கலைமகளுக்குத் தலைவியே, பிருகு முனிவரின் திருமகளே, துயரம் தீர்ப்பவளே, ரத்தின மயமானவளே, நவமணி பதித்த குண்டலம் அணிந்தவளே, அமைதி நிலவும் புன்னகை முகத்தை உடையவளே, கலியுக பாவங்களைத் தொலைப்பவளே, வேண்டியோர் விரும்பியவுடன் கலைகளை அருளிப் பயன்களை வழங்கும் திருக்கரங்களை உடையவளே, மதுசூதனின் மனைவியே, வித்யா லக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் என வேண்டினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்லோகம் 7

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

7. பக்தயா க்ருதம் ஸதோத்ர ரத்னம் 
தீக்ஷி தானந்த ராமேண ஸர்வார்த்த ஸித்யை|
நித்யம் படேத் பக்தி சாயீ 
வாஸுதேவ ப்ரஸாதோ பவே தேவ தஸ்ய||  

  • பக்தயா - பக்தியுடன்
  • க்ருதம் - செய்யப்பட்ட, இயற்றப்பட்ட
  • ஸ்தோத்ர - துதிப்பாடலாகிய, ஸ்தோத்திரமாகிய
  • ரத்னம் - ரத்தினம், மணி 
  • தீக்ஷித - தீக்ஷிதர் மற்றும்
  • ஆனந்த ராமேண - ஆனந்த ராமன் என்பவரால்
  • ஸர்வார்த்த - எல்லா விதமான நன்மைகளும், எல்லாப் பேறுகளும்
  • ஸித்யை - சித்திப்பதற்கோக, கிடைப்பதற்காக 
  • நித்யம் - தினமும், நாள்தோறும்
  • படேத் - படிப்பவர் எவரோ
  • பக்தி - பக்தி கொண்ட
  • சாயீ - பக்தர்
  • வாஸுதேவ - வாசுதேவனுடைய, இறைவனுடைய 
  • ப்ரஸாதோ - அருள், அனுக்கிரம்
  • பவேத் - உண்டாகும்
  • ஏவ - நிச்சயமாக
  • தஸ்ய - அவருக்கு

தீக்ஷிதர் மற்றும் ஆனந்த ராமன் ஆகியோரால் எல்லாப் பேறுகளும் சித்திப்பதற்காக பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திர ரத்தினத்தை, பக்தி கொண்ட பக்தர் எவர் தினமும் படிக்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக இறைவனின், வாசுதேவனின்,  ஸ்ரீ பார்த்தசாரதியின் அருள் உண்டாகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஜய லக்ஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

விஜயம் என்றால் வெற்றி என்று பொருள். வெற்றியை அருள்பவள் விஜயலக்ஷ்மி. எடுத்த காரியங்களில் வெற்றிபெறச் செய்பவள். விஜயலக்ஷ்மிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. தன் திருக்கரங்களில் வாள், சார்ங்கம், சுதர்சன சக்ரம், சங்கு, கத்தி, கேடயம், அபயம், வரதம் போன்றவற்றைத் தரித்து அன்னத்தின் மீது அமர்ந்தருளும் கோலம் கொண்டவள்.

ஜய கமலாஸினி ஸத்³க³தி தா³யினி
ஜ்ஞான விகாஸினி கா³ன மயே
அனுதி³ன மர்சித குங்கும தூ⁴ஸர
பூ⁴ஷித வாஸித வாத்³ய நுதே|
கனகத⁴ரா ஸ்துதி வைப⁴வ வந்தி³த
ஸ²ங்கர தே³ஸி²க மான்ய பதே³
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
விஜய லக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்|| 

  • ஜய - வெற்றி உண்டாகட்டும், வெற்றி வடிவானவளே 
  • கமலாஸினி - தாமரையை இருப்பிடமாகக் கொண்டவளே
  • ஸத்³க³தி - நற்கதியை
  • தா³யினி - தருபவளே, அளிப்பவளே
  • ஜ்ஞான - அறிவை, ஞானத்தை
  • விகாஸினி -  மலரச் செய்பவளே 
  • கா³ன மயே - இசை வடிவானவளே, இசையோடு கலந்தவளே 
  • அனு தி³னம் - நாள்தோறும்,  தினமும்
  • அர்சித -  பக்தர்களால் அர்ச்சிக்கப்படும்
  • குங்கும - குங்குமப் பொடியால்
  • தூ⁴ஸர - பூசப்பட்டு, நிறைந்தவளாய்
  • பூ⁴ஷித - அலங்கரிக்கப்பட்டவளே
  • வாஸித -  நறுமணம் வீசுகின்றவளே
  • வாத்³ய நுதே - வாத்திய இசையால், இசைக் கருவிகளால் வணங்கப்படுபவளே 
  • கனகத⁴ரா - பொன் மழை
  • ஸ்துதி -  துதியினுடைய
  • வைப⁴வ -  மகிமையால், பெருமையால்
  • வந்தி³த - வணங்கப்பட்டவளே
  • ஸ²ங்கர -  ஆதிசங்கர
  • தே³ஸி²க -  ஜகத் குருவினால்
  • மான்ய பதே³ - மதிக்கப்படும், போற்றப்படும் திருவடிகளை உடையவளே
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • விஜய லக்ஷ்மீ - விஜயலட்சுமி தேவியே
  • ஸதா³ - எப்போதும் 
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

தாமரை மலரில் பொலிபவளே, நற்கதியளிப்பவளே, ஞானம் வளர்ப்பவளே, கான மயமானவளே, வெற்றியைக் குறைவின்றி நல்குபவளே, அனு தினமும் குங்குமத்தினாலும், மலர்களினாலும், அர்ச்சனை பெறுபவளே, வாத்தியங்கள் முழங்க, சங்கர பகவத் பாதாள் கனகதாரா துதி பாட, அவருக்கு அருளியதன் மூலம் பெருமை ளித்தவளே, மதுசூதனின் மனைவியே, வெற்றித் திருமகளே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என பக்தியுடன் கூறி ஸ்ரீ விஜய லக்ஷ்மி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கும் எதிலும் வெற்றி தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்லோகம் 6

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யு பேதம் 
ரங்க நாதே தேவேன நித்யம் ஸமேதம்|
பக்தைஸ் ஸதா ஸாது கீதம் 
ஸ்வீய பக்தாய பார்த்தாய ஸம் ப்ரோக்த கீதம்||  

  • லக்ஷ்மீ - லட்சுமி தேவியுடனும்
  • ந்ருஸிம்ஹ - நரசிம்ம மூர்த்தியுடனும்
  • ஆத்யு பேதம் - முதன்மையாகக் கூடி இருப்பவர், லட்சுமி நரசிம்மராக எழுந்தருளியிருப்பவர்
  • ரங்கநாத - ரங்கநாதர் என்னும்
  • தேவேன - இறைவனுடன்
  • நித்யம் - எப்போதும்
  • ஸமேதம் - இணைந்து இருப்பவர்
  • பக்தைஸ் - பக்தர்களால்
  • ஸதா - எப்போதும்
  • ஸாது - அழகாக, நன்முறையில்
  • கீதம் - புகழப் பாடுபவர்
  • ஸ்வீய - தன்னுடைய
  • பக்தாய - பக்தனான
  • பார்த்தாய - அர்ஜுனனுக்கு
  • ஸம்ப்ரோக்த - உபதேசிக்கப்பட்ட
  • கீதம் - பகவத் கீதையாக இருப்பவர்

ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீ ரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ ஸந்தான லக்ஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

சந்தானம் என்றால் மழலைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர மழலைச் செல்வம் இன்றியமையாதது. மற்ற செல்வங்களை விட சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் ஆகும். அத்தகைய மழலைச் செல்வத்தை வழங்குபவள், சந்தானலக்ஷ்மி. ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கும் தோற்றம் கொண்டவள். சடையுடன் கிரீடத்தை சூடியவளாக, வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களைத் தரித்து காட்சி தருகிறாள். இவளது பீடத்தில் சாமரம் வீசியவாறும், விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் இரு கன்னிப் பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். பிள்ளை பாக்கியம் பித்ருக்களைக் கடைத்தேற்றும் என்பது இந்து மத நம்பிக்கை. 

அயிக²க³ வாஹினி மோஹினி சக்ரிணி
ராக³ விவர்தி⁴னி ஜ்ஞான மயே
கு³ண க³ண வாரதி⁴ லோக ஹிதைஷிணி
ஸ்வர ஸப்த பூ⁴ஷித கா³ன நுதே| 
ஸகல ஸுராஸுர தே³வ முனீஸ்²வர
மானவ வந்தி³த பாத³ யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
ஸந்தான லக்ஷ்மீ த்வம் பாலய மாம்||

  • அயி - ஓ! 
  • க²க³ வாஹினி - கருடனை வாகனமாகக் கொண்டவளே!
  • மோஹினி - மயக்கும் அழகுடையவளே, மோகினி வடிவம் எடுத்தவளே!
  • சக்ரிணி - சக்கராயுதத்தைக் கையில் ஏந்தியவளே!
  • ராக³ விவர்தி⁴னி - பக்தர்களிடம் அன்பையும், இசையில் ராகங்களையும் வளர்ப்பவளே!
  • ஜ்ஞான மயே - பேரறிவு வடிவமாகத் திகழ்பவளே!
  • கு³ண க³ண வாரதி⁴ - நற்குணங்களின் கடலாக விளங்குபவளே!
  • லோக ஹிதைஷிணி - உலக மக்களின் நன்மையை விரும்புபவளே!
  • ஸ்வர ஸப்த பூ⁴ஷித - ஏழு ஸ்வரங்களால் அலங்கரிக்கப்பட்டவளே!
  • கா³ன நுதே - தெய்வீகப் பாடல்களால் துதிக்கப்படுபவளே!
  • ஸகல - அனைத்து விதமான
  • ஸுர - தேவர்கள்
  • அஸுர - அசுரர்கள்
  • தே³வ - தேவ லோகப் பெரு மக்கள்
  • முனீஸ்²வர - முனிவர்களில் சிறந்தவர்கள்
  • மானவ - மனிதர்களால்
  • வந்தி³த - வணங்கப்பட்ட 
  • பாத³ யுதே - திருவடி இணைகளை, இரண்டு பாதங்களை உடையவளே!
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • ஸந்தான லக்ஷ்மீ - சந்தான லட்சுமித் தாயே, குழந்தைப் பேறு அருளும் அன்னையே!
  • த்வம் - நீ
  • பாலய மாம் - என்னைக் காப்பாற்று, காத்து அருள்வாய்

கருடனை வாகனமாகக் கொண்ட மோகினியே, சக்கரம் தாங்கி அன்பர்களைக் காத்து அன்பை வளர்ப்பவளே, அறிவு மயமானவளே, உயர் நலமுடையவளே, உலகனைத்தும் நலம்பெற அருள்பவளே, ஏழிசைக் கானத்தினால் துதிக்கப் படுபவளே, சூரரும் அசுரரும் தேவரும் முனிவரும் மாந்தரும் பணிந்து துதிக்கும் இணையடி வாய்ந்தவளே, இம்மைக்கு மட்டும் இல்லாமல் மறுமைக்கும் வாழ்வளிக்கும் சந்தானத்தை அருள்பவளே, மதுசூதனன் மனைவியே, சந்தான லக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என வேண்டிட, செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ர தோஷத்தையும் ஸ்ரீ ஸந்தான லக்ஷ்மி நீக்கி அருள் புரிவாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்லோகம் 5

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

5. வாமே கரே சாரு சக்ரம் 
வாரணேந் த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம் சப்த நக்ரம்|
காருண்ய ஸம்பூர்ண நேத்ரம் 
ஸ்வீய ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம்||  

  • வாமே - இடது பக்கத்தில்
  • கரே - கையில்
  • சாரு - அழகான
  • சக்ரம் - சக்கரத்தை ஏந்தியவனும்
  • வாரணேந்த்ர - யானைகளின் அரசனான கஜேந்திரனை
  • ஆர்த்த - துன்புறுத்திய
  • ஸஞ்சின்ன - துண்டித்த, பிளந்த
  • ஸம் - நன்றாக
  • சப்த - ஒலித்த, கத்திய
  • நக்ரம் - முதலையை அழித்தவனும்
  • காருண்ய - கருணை
  • ஸம்பூர்ண - நிறைந்த
  • நேத்ரம் - கண்களை உடையவனும்
  • ஸ்வீய - தன்னுடைய
  • ஸெளந்தர்ய - அழகால்
  • ஸம்பூர்ண - நிறைந்தவனும் ஆகிய
  • காமாக்ய - காமாக்யா தேவியின்
  • புத்ரம் - மகனை வணங்குகிறேன் 

இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணை மிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீ பார்த்தசாரதியை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ கஜ³ லக்ஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

இவளே ராஜலக்ஷ்மி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திர லோகத்தைத் திரும்பப் பெற்றான். ‘கஜம்’ என்றால் யானை. இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வது போல் அமர்ந்திருப்பதால் கஜலக்ஷ்மி என்று பெயர். நிலத்திற்கு செழுமையான நீர் தேவை என்பதால் நீர் கொண்ட மேகங்கள் யானைகளாகி, நில மகளாகிய இலக்குமியின் மீது அபிஷேகிப்பதை இவ்வுருவம் குறிக்கிறது என்பார்கள். கஜலக்ஷ்மியை ராஜலக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி எனவும் அழைப்பர். கஜலக்ஷ்மியின் உருவத்தை வீட்டு நிலை வாசற்படியில் காணலாம்.

ஜய ஜய து³ர் க³தி நாஸி²னி காமினி
ஸர்வ ப²லப்ரத³ ஸா²ஸ்த்ர மயே
ரத⁴ கஜ³ துரக³ பதா³தி ஸமாவ்ருத
பரிஜன மண்டி³த லோக நுதே|
ஹரி ஹர ப்³ரஹ்ம ஸுபூஜித ஸேவித
தாப நிவாரிணி பாத³ யுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
கஜ³ லக்ஷ்மீ ரூபேண ஸதா³ பாலய மாம்||

  • ஜய ஜய - வெற்றி உண்டாகட்டும், வெற்றி உண்டாகட்டும்
  • து³ர் க³தி நாஸி²னி - துன்பங்களையும் வறுமையையும் அழிப்பவளே
  • காமினி - மங்களகரமானவளே, நல்விருப்பங்களை அளிப்பவளே
  • ஸர்வ ப²லப்ரத³ - எல்லாவகை நற்பலன்களையும் தருபவளே
  • ஸா²ஸ்திர மயே - சாஸ்திரங்களின் வடிவமாக விளங்குபவளே
  • ரத⁴ கஜ³ துரக³ பதா³தி - தேர், யானை, குதிரை, காலாட்படை ஆகிய நால்வகைச் சேனைகளுடனும்
  • ஸமாவ்ருத - சூழப்பட்டவளே
  • பரிஜன - ஏவலர்கள் மற்றும் சுற்றத்தாருடன்
  • மண்டி³த - அலங்காரமாக வீற்றிருப்பவளே
  • லோக நுதே - உலக மக்கள் யாவராலும் துதிக்கப்படுபவளே
  • ஹரி ஹர ப்³ரஹ்ம - விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகிய முமூர்த்திகளாலும்
  • ஸுபூஜித - மிகச் சிறப்பாக வழிபடப்படுபவளே
  • ஸேவித - பக்தியுடன் வணங்கப்படுபவளே
  • தாப நிவாரிணி - மனக் கவலைகளையும் உலகத் துன்பங்களையும் நீக்குபவளே
  • பாத³ யுதே - அத்தகைய போற்றத்தக்க திருவடிகளைக் கொண்டவளே
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • கஜ³ லக்ஷ்மீ ரூபேண - கஜலட்சுமி தேவியின் வடிவத்தில் எழுந்தருளி இருப்பவளே
  • ஸதா³ - எப்போதும் 
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

தீவினைகள் அழிக்கும் அழகியே, எல்லாப் பயன்களையும் அருள்பவளே, சாத்திரமயமானவளே, தேர், யானை, புரவி, காலாள் சூழப் பணியாட்களும், மக்களும் துதிக்க விளங்குபவளே, அரியும், அரனும், பிரம்மனும் வணங்க நிற்பவளே, மழை பொழிய அருள்பவளே, தாபங்களைத் தீர்க்கும் திருவடியினை உடையவளே, மதுசூதனன் மனைவியே, கஜலக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என வேண்டி கஜ லக்ஷ்மியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம். வாழ்க்கை என்றும் ஆனந்தமாக இருக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்லோகம் 4

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

4. பா ஹுத்வயோ பேத தேஹம்  
பாஞ்சஜந்யாக் ய சங்கஸ் புரத்தக்ஷ பாஹும்|
ஸ்ரீ காருடஸ் வீய வாஹம் 
புத்ர பௌத்ராதி ஸம்பூர்ண திவ்யஸ் வகேஹம்||  

  • பாஹு த்வயம் – இரண்டு கைகள்
  • உபேத – கொண்ட, பொருந்திய
  • தேஹம் – திருமேனியை கொண்டவர் 
  • பாஞ்சஜந்ய – பாஞ்சஜன்யம் என்னும் பெயர் கொண்ட
  • ஆக்ய – பெயருடைய
  • சங்க – சங்கானது
  • ஸ்புரத் – விளங்குகின்ற, பிரகாசிக்கின்ற
  • தக்ஷ – வலது
  • பாஹும் – வலது கையில் பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்திப் பிரகாசிப்பவர்
  • ஸ்ரீ காருட – கருட பகவானை
  • ஸ்வீய – தன்னுடைய
  • வாஹம் – வாகனமாகக் கொண்டவர்
  • புத்ர – பிள்ளைகள்
  • பௌத்ர – பேரன்கள்
  • ஆதி – முதலானவர்களுடன்
  • ஸம்பூர்ண – நிறைந்து விளங்கும்
  • திவ்ய – தெய்வீகமான, மங்களகரமான
  • ஸ்வ – தன்னுடைய
  • கேஹம் – இல்லத்தை அருளுபவர்

இரு கரங்களை உடைய திருமேனி கொண்டவரும், வலது கையில் பாஞ்சஜன்யம் என்னும் திருச்சங்கினை ஏந்திப் பிரகாசிப்பவரும், கருடனைத் தன் வாகனமாகக் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட பெருமானை,  ஸ்ரீ பார்த்தசாரதியை பூஜிக்கிறேன் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ தை⁴ர்ய லக்ஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

மனத்திற்கு தைரியத்தை தருபவள் வீரலக்ஷ்மி என்ற தைரியலக்ஷ்மி. வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவள். தெளிவான, அத்தியாவசியமான முடிவெடுக்க, அதற்கான முயற்சி மேற்கொள்ள மனதுக்கு உறுதியளித்து அச்சத்தைத் தவிர்த்து வெற்றியை அருள்பவள் இவள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்டவள். வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குபவள். தாமரைப் பூவின் மீது வீற்றிருப்பாள். உருக்கிய பொன் போன்ற நிறத்தினை உடையவள், உயர் கிரீடத்தை உடையவள். தங்கநிற ரவிக்கை அணிந்தவள். எல்லாருக்கும் உறுதியான மனோதிடத்தை அருள்பவள்.

ஜய வர வர்ஷிணி வைஷ்ணவி பா⁴ர்க³வி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ர மயே 
ஸுர க³ண பூஜித ஸு²க்⁴ர ப²லப்ரத³ 
ஜ்ஞான விகாஸினி ஸா²ஸ்த்ர நுதே|
ப⁴வ ப⁴ய ஹாரிணி பாப விமோசனி
ஸாது⁴ ஜனாஸ்²ரித பாத³ யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத⁴ன காமினி
தை⁴ர்ய லக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்||

  • ஜய - ஜெயம், வெற்றி 
  • வர - சிறந்த, மேலான, வெற்றியைத் தரும் உன்னதமானவள் 
  • வர்ஷிணி - பொழிபவள், அருளை வாரி வழங்குபவள் 
  • வைஷ்ணவி - மகாவிஷ்ணுவின் சக்தி வடிவானவள்
  • பா⁴ர்க³வி - பிருகு முனிவரின் புதல்வி, லக்ஷ்மி தேவி 
  • மந்திர - மந்திரங்களின்
  • ஸ்வரூபிணி - உருவமாகத் திகழ்பவள்
  • மந்திர மயே - மந்திரங்களின் வடிவாகவே நிறைந்திருப்பவள்
  • ஸுர க³ண - தேவர்களின் கூட்டங்களால்
  • பூஜித - வணங்கப்படுபவள், பூஜிக்கப்படுபவள்
  • ஸு²க்⁴ர - தூய்மையான, பிரகாசமான
  • ப²லப்ரத³ - பலன்களை அளிப்பவள்ஜ்
  • ஜ்ஞான - அறிவை, ஞானத்தை
  • விகாஸினி - மலரச் செய்பவள், விரிவடையச் செய்பவள்
  • ஸா²ஸ்த்ர நுதே - சாஸ்திரங்களால் துதிக்கப்படுபவள்
  • ப⁴வ - பிறவி, வாழ்க்கைச் சக்கரம்
  • ப⁴ய - பிறவித் துன்பத்தினால் ஏற்படும் பயம் 
  • ஹாரிணி - நீக்குபவள், அழிப்பவள்
  • பாப - பாவங்களில் இருந்து
  • விமோசனி - விடுதலை அளிப்பவள்
  • ஸாது⁴ - நற்குணமுள்ள மேலோர்கள், சந்நியாசிகள்
  • ஜன - மக்களின்
  • ஆஸ்²ரித - சரணாகதியை, நன்மக்களின் புகலிடத்தை
  • பாத³ யுதே -  திருவடிகளை கொண்டவள், நல்லவர்கள் சரணடையும் திருவடிகளைக் கொண்டவள்
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • தை⁴ர்ய லக்ஷ்மீ - தைரிய லக்ஷ்மி தாயே
  • ஸதா³ - எப்போதும் 
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

பிருகு முனிவரின் மகளே, மந்திர ரூபிணியே, மந்திர மயமானவளே, தேவர் கூட்டம் வழிபடும் அருட்சக்தியே, ஞான மலர்ச்சியுடையவளே, சாத்திரங்கள் போற்றும் புனித மகளே, இவ்வுலகில் ஏற்படும் பயங்களை நீக்குபவளே, பாவத்தைப் போக்குபவளே, மதுசூதனின் மனைவியே, நின்னருளால் எனது எல்லாப் பயமும் போகட்டும். தைரிய லக்ஷ்மியே, எனக்கு எப்பொழுதும் தைரியம் அளித்துக் காப்பாற்ற வேண்டும், என்று பக்தியுடன் கூறி வந்தால் மன உறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஸ்ரீ தைர்ய லக்ஷ்மி அளிப்பாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்லோகம் 3

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

3. லோகா வனாயாத் தலீலம் 
பூஜி தானேக தேவேந்த்ர லோகைக பாலம்|
ஸ்ரீ தேவகீ புண்ய பாலம் 
ஆஹ்ரு தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்||

  • லோகா – உலகங்களை
  • அவநாய – காப்பதற்காக, இரட்சிப்பதற்காக
  • ஆத்த லீலம் – லீலைகளை, அவதாரங்களை எடுத்தவரே
  • பூஜித – வணங்கப்படுபவரே, பூஜிக்கப்படுபவரே
  • அனேக – பல வகையான
  • தேவேந்த்ர – தேவர்களின் தலைவனான இந்திரனால்
  • லோக – உலகங்களுக்கு
  • ஏக பாலம் – ஒப்பற்ற ஒரே காவலராக, தலைவராக இருப்பவரே
  • ஸ்ரீ தேவகீ – மங்களகரமான தேவகி தேவியின்
  • புண்ய பாலம் – புண்ணியத்தின் வடிவமான குழந்தையே, மகனே
  • ஆஹ்ருத – கவர்ந்து இழுத்தவரே, கொண்டு வரப்பட்டவரே
  • அனேக – பல தரப்பட்ட
  • கோபீ – கோபிகா ஸ்திரீகளின், ஆயர்பாடி பெண்களின் மனதை
  • ஸுவர்ண ஆப – தங்கம் போன்ற பிரகாசமான ஒளியுடைய
  • சேலம் – ஆடைகளை அணிந்திருப்பவரே

உலகங்களைக் காப்பதற்காகப் பல லீலைகளைப் புரிந்தவரும், இந்திரன் உள்ளிட்ட பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் மனதைக் கவர்ந்தவரும், பொன்னிற ஆடையை உடுத்தியிருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை, ஸ்ரீ பார்த்த சாரதியை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்