ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
5. வாமே கரே சாரு சக்ரம்
வாரணேந் த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம் சப்த நக்ரம்|
காருண்ய ஸம்பூர்ண நேத்ரம்
ஸ்வீய ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம்||
- வாமே - இடது பக்கத்தில்
- கரே - கையில்
- சாரு - அழகான
- சக்ரம் - சக்கரத்தை ஏந்தியவனும்
- வாரணேந்த்ர - யானைகளின் அரசனான கஜேந்திரனை
- ஆர்த்த - துன்புறுத்திய
- ஸஞ்சின்ன - துண்டித்த, பிளந்த
- ஸம் - நன்றாக
- சப்த - ஒலித்த, கத்திய
- நக்ரம் - முதலையை அழித்தவனும்
- காருண்ய - கருணை
- ஸம்பூர்ண - நிறைந்த
- நேத்ரம் - கண்களை உடையவனும்
- ஸ்வீய - தன்னுடைய
- ஸெளந்தர்ய - அழகால்
- ஸம்பூர்ண - நிறைந்தவனும் ஆகிய
- காமாக்ய - காமாக்யா தேவியின்
- புத்ரம் - மகனை வணங்குகிறேன்
இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணை மிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீ பார்த்தசாரதியை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment