ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
மனத்திற்கு தைரியத்தை தருபவள் வீரலக்ஷ்மி என்ற தைரியலக்ஷ்மி. வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவள். தெளிவான, அத்தியாவசியமான முடிவெடுக்க, அதற்கான முயற்சி மேற்கொள்ள மனதுக்கு உறுதியளித்து அச்சத்தைத் தவிர்த்து வெற்றியை அருள்பவள் இவள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்டவள். வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குபவள். தாமரைப் பூவின் மீது வீற்றிருப்பாள். உருக்கிய பொன் போன்ற நிறத்தினை உடையவள், உயர் கிரீடத்தை உடையவள். தங்கநிற ரவிக்கை அணிந்தவள். எல்லாருக்கும் உறுதியான மனோதிடத்தை அருள்பவள்.
ஜய வர வர்ஷிணி வைஷ்ணவி பா⁴ர்க³வி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ர மயே
ஸுர க³ண பூஜித ஸு²க்⁴ர ப²லப்ரத³
ஜ்ஞான விகாஸினி ஸா²ஸ்த்ர நுதே|
ப⁴வ ப⁴ய ஹாரிணி பாப விமோசனி
ஸாது⁴ ஜனாஸ்²ரித பாத³ யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத⁴ன காமினி
தை⁴ர்ய லக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்||
- ஜய - ஜெயம், வெற்றி
- வர - சிறந்த, மேலான, வெற்றியைத் தரும் உன்னதமானவள்
- வர்ஷிணி - பொழிபவள், அருளை வாரி வழங்குபவள்
- வைஷ்ணவி - மகாவிஷ்ணுவின் சக்தி வடிவானவள்
- பா⁴ர்க³வி - பிருகு முனிவரின் புதல்வி, லக்ஷ்மி தேவி
- மந்திர - மந்திரங்களின்
- ஸ்வரூபிணி - உருவமாகத் திகழ்பவள்
- மந்திர மயே - மந்திரங்களின் வடிவாகவே நிறைந்திருப்பவள்
- ஸுர க³ண - தேவர்களின் கூட்டங்களால்
- பூஜித - வணங்கப்படுபவள், பூஜிக்கப்படுபவள்
- ஸு²க்⁴ர - தூய்மையான, பிரகாசமான
- ப²லப்ரத³ - பலன்களை அளிப்பவள்ஜ்
- ஜ்ஞான - அறிவை, ஞானத்தை
- விகாஸினி - மலரச் செய்பவள், விரிவடையச் செய்பவள்
- ஸா²ஸ்த்ர நுதே - சாஸ்திரங்களால் துதிக்கப்படுபவள்
- ப⁴வ - பிறவி, வாழ்க்கைச் சக்கரம்
- ப⁴ய - பிறவித் துன்பத்தினால் ஏற்படும் பயம்
- ஹாரிணி - நீக்குபவள், அழிப்பவள்
- பாப - பாவங்களில் இருந்து
- விமோசனி - விடுதலை அளிப்பவள்
- ஸாது⁴ - நற்குணமுள்ள மேலோர்கள், சந்நியாசிகள்
- ஜன - மக்களின்
- ஆஸ்²ரித - சரணாகதியை, நன்மக்களின் புகலிடத்தை
- பாத³ யுதே - திருவடிகளை கொண்டவள், நல்லவர்கள் சரணடையும் திருவடிகளைக் கொண்டவள்
- ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
- மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
- தை⁴ர்ய லக்ஷ்மீ - தைரிய லக்ஷ்மி தாயே
- ஸதா³ - எப்போதும்
- பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக
பிருகு முனிவரின் மகளே, மந்திர ரூபிணியே, மந்திர மயமானவளே, தேவர் கூட்டம் வழிபடும் அருட்சக்தியே, ஞான மலர்ச்சியுடையவளே, சாத்திரங்கள் போற்றும் புனித மகளே, இவ்வுலகில் ஏற்படும் பயங்களை நீக்குபவளே, பாவத்தைப் போக்குபவளே, மதுசூதனின் மனைவியே, நின்னருளால் எனது எல்லாப் பயமும் போகட்டும். தைரிய லக்ஷ்மியே, எனக்கு எப்பொழுதும் தைரியம் அளித்துக் காப்பாற்ற வேண்டும், என்று பக்தியுடன் கூறி வந்தால் மன உறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஸ்ரீ தைர்ய லக்ஷ்மி அளிப்பாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment