ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
சந்தானம் என்றால் மழலைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர மழலைச் செல்வம் இன்றியமையாதது. மற்ற செல்வங்களை விட சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் ஆகும். அத்தகைய மழலைச் செல்வத்தை வழங்குபவள், சந்தானலக்ஷ்மி. ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கும் தோற்றம் கொண்டவள். சடையுடன் கிரீடத்தை சூடியவளாக, வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களைத் தரித்து காட்சி தருகிறாள். இவளது பீடத்தில் சாமரம் வீசியவாறும், விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் இரு கன்னிப் பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். பிள்ளை பாக்கியம் பித்ருக்களைக் கடைத்தேற்றும் என்பது இந்து மத நம்பிக்கை.
அயிக²க³ வாஹினி மோஹினி சக்ரிணி
ராக³ விவர்தி⁴னி ஜ்ஞான மயே
கு³ண க³ண வாரதி⁴ லோக ஹிதைஷிணி
ஸ்வர ஸப்த பூ⁴ஷித கா³ன நுதே|
ஸகல ஸுராஸுர தே³வ முனீஸ்²வர
மானவ வந்தி³த பாத³ யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
ஸந்தான லக்ஷ்மீ த்வம் பாலய மாம்||
- அயி - ஓ!
- க²க³ வாஹினி - கருடனை வாகனமாகக் கொண்டவளே!
- மோஹினி - மயக்கும் அழகுடையவளே, மோகினி வடிவம் எடுத்தவளே!
- சக்ரிணி - சக்கராயுதத்தைக் கையில் ஏந்தியவளே!
- ராக³ விவர்தி⁴னி - பக்தர்களிடம் அன்பையும், இசையில் ராகங்களையும் வளர்ப்பவளே!
- ஜ்ஞான மயே - பேரறிவு வடிவமாகத் திகழ்பவளே!
- கு³ண க³ண வாரதி⁴ - நற்குணங்களின் கடலாக விளங்குபவளே!
- லோக ஹிதைஷிணி - உலக மக்களின் நன்மையை விரும்புபவளே!
- ஸ்வர ஸப்த பூ⁴ஷித - ஏழு ஸ்வரங்களால் அலங்கரிக்கப்பட்டவளே!
- கா³ன நுதே - தெய்வீகப் பாடல்களால் துதிக்கப்படுபவளே!
- ஸகல - அனைத்து விதமான
- ஸுர - தேவர்கள்
- அஸுர - அசுரர்கள்
- தே³வ - தேவ லோகப் பெரு மக்கள்
- முனீஸ்²வர - முனிவர்களில் சிறந்தவர்கள்
- மானவ - மனிதர்களால்
- வந்தி³த - வணங்கப்பட்ட
- பாத³ யுதே - திருவடி இணைகளை, இரண்டு பாதங்களை உடையவளே!
- ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
- மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
- ஸந்தான லக்ஷ்மீ - சந்தான லட்சுமித் தாயே, குழந்தைப் பேறு அருளும் அன்னையே!
- த்வம் - நீ
- பாலய மாம் - என்னைக் காப்பாற்று, காத்து அருள்வாய்
கருடனை வாகனமாகக் கொண்ட மோகினியே, சக்கரம் தாங்கி அன்பர்களைக் காத்து அன்பை வளர்ப்பவளே, அறிவு மயமானவளே, உயர் நலமுடையவளே, உலகனைத்தும் நலம்பெற அருள்பவளே, ஏழிசைக் கானத்தினால் துதிக்கப் படுபவளே, சூரரும் அசுரரும் தேவரும் முனிவரும் மாந்தரும் பணிந்து துதிக்கும் இணையடி வாய்ந்தவளே, இம்மைக்கு மட்டும் இல்லாமல் மறுமைக்கும் வாழ்வளிக்கும் சந்தானத்தை அருள்பவளே, மதுசூதனன் மனைவியே, சந்தான லக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என வேண்டிட, செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ர தோஷத்தையும் ஸ்ரீ ஸந்தான லக்ஷ்மி நீக்கி அருள் புரிவாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment