ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
7. பக்தயா க்ருதம் ஸதோத்ர ரத்னம்
தீக்ஷி தானந்த ராமேண ஸர்வார்த்த ஸித்யை|
நித்யம் படேத் பக்தி சாயீ
வாஸுதேவ ப்ரஸாதோ பவே தேவ தஸ்ய||
- பக்தயா - பக்தியுடன்
- க்ருதம் - செய்யப்பட்ட, இயற்றப்பட்ட
- ஸ்தோத்ர - துதிப்பாடலாகிய, ஸ்தோத்திரமாகிய
- ரத்னம் - ரத்தினம், மணி
- தீக்ஷித - தீக்ஷிதர் மற்றும்
- ஆனந்த ராமேண - ஆனந்த ராமன் என்பவரால்
- ஸர்வார்த்த - எல்லா விதமான நன்மைகளும், எல்லாப் பேறுகளும்
- ஸித்யை - சித்திப்பதற்கோக, கிடைப்பதற்காக
- நித்யம் - தினமும், நாள்தோறும்
- படேத் - படிப்பவர் எவரோ
- பக்தி - பக்தி கொண்ட
- சாயீ - பக்தர்
- வாஸுதேவ - வாசுதேவனுடைய, இறைவனுடைய
- ப்ரஸாதோ - அருள், அனுக்கிரம்
- பவேத் - உண்டாகும்
- ஏவ - நிச்சயமாக
- தஸ்ய - அவருக்கு
தீக்ஷிதர் மற்றும் ஆனந்த ராமன் ஆகியோரால் எல்லாப் பேறுகளும் சித்திப்பதற்காக பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திர ரத்தினத்தை, பக்தி கொண்ட பக்தர் எவர் தினமும் படிக்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக இறைவனின், வாசுதேவனின், ஸ்ரீ பார்த்தசாரதியின் அருள் உண்டாகும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment