About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 20 August 2026

ஸ்ரீ விஜய லக்ஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

விஜயம் என்றால் வெற்றி என்று பொருள். வெற்றியை அருள்பவள் விஜயலக்ஷ்மி. எடுத்த காரியங்களில் வெற்றிபெறச் செய்பவள். விஜயலக்ஷ்மிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. தன் திருக்கரங்களில் வாள், சார்ங்கம், சுதர்சன சக்ரம், சங்கு, கத்தி, கேடயம், அபயம், வரதம் போன்றவற்றைத் தரித்து அன்னத்தின் மீது அமர்ந்தருளும் கோலம் கொண்டவள்.

ஜய கமலாஸினி ஸத்³க³தி தா³யினி
ஜ்ஞான விகாஸினி கா³ன மயே
அனுதி³ன மர்சித குங்கும தூ⁴ஸர
பூ⁴ஷித வாஸித வாத்³ய நுதே|
கனகத⁴ரா ஸ்துதி வைப⁴வ வந்தி³த
ஸ²ங்கர தே³ஸி²க மான்ய பதே³
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
விஜய லக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்|| 

  • ஜய - வெற்றி உண்டாகட்டும், வெற்றி வடிவானவளே 
  • கமலாஸினி - தாமரையை இருப்பிடமாகக் கொண்டவளே
  • ஸத்³க³தி - நற்கதியை
  • தா³யினி - தருபவளே, அளிப்பவளே
  • ஜ்ஞான - அறிவை, ஞானத்தை
  • விகாஸினி -  மலரச் செய்பவளே 
  • கா³ன மயே - இசை வடிவானவளே, இசையோடு கலந்தவளே 
  • அனு தி³னம் - நாள்தோறும்,  தினமும்
  • அர்சித -  பக்தர்களால் அர்ச்சிக்கப்படும்
  • குங்கும - குங்குமப் பொடியால்
  • தூ⁴ஸர - பூசப்பட்டு, நிறைந்தவளாய்
  • பூ⁴ஷித - அலங்கரிக்கப்பட்டவளே
  • வாஸித -  நறுமணம் வீசுகின்றவளே
  • வாத்³ய நுதே - வாத்திய இசையால், இசைக் கருவிகளால் வணங்கப்படுபவளே 
  • கனகத⁴ரா - பொன் மழை
  • ஸ்துதி -  துதியினுடைய
  • வைப⁴வ -  மகிமையால், பெருமையால்
  • வந்தி³த - வணங்கப்பட்டவளே
  • ஸ²ங்கர -  ஆதிசங்கர
  • தே³ஸி²க -  ஜகத் குருவினால்
  • மான்ய பதே³ - மதிக்கப்படும், போற்றப்படும் திருவடிகளை உடையவளே
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • விஜய லக்ஷ்மீ - விஜயலட்சுமி தேவியே
  • ஸதா³ - எப்போதும் 
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

தாமரை மலரில் பொலிபவளே, நற்கதியளிப்பவளே, ஞானம் வளர்ப்பவளே, கான மயமானவளே, வெற்றியைக் குறைவின்றி நல்குபவளே, அனு தினமும் குங்குமத்தினாலும், மலர்களினாலும், அர்ச்சனை பெறுபவளே, வாத்தியங்கள் முழங்க, சங்கர பகவத் பாதாள் கனகதாரா துதி பாட, அவருக்கு அருளியதன் மூலம் பெருமை ளித்தவளே, மதுசூதனின் மனைவியே, வெற்றித் திருமகளே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என பக்தியுடன் கூறி ஸ்ரீ விஜய லக்ஷ்மி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கும் எதிலும் வெற்றி தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment