ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ப்ரணத ஸுரேஸ்²வரி பா⁴ரதி பா⁴ர்க³வி
ஸோ²க வினாஸி²னி ரத்ன மயே
மணி மய பூ⁴ஷித கர்ண விபூ⁴ஷண
ஸா²ந்தி ஸமாவ்ருத ஹாஸ்ய முகே²|
நவ நிதி⁴ தா³யினி கலி மல ஹாரிணி
காமித ப²லப்ரத³ ஹஸ்த யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
வித்³யா லக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்||
- ப்ரணத - வணங்குகின்றவர்களுடைய, சரணடைந்தவர்களுடைய
- ஸுரேஸ்²வரி - தேவர்களின் தலைவியே, தேவ தேவியே
- பா⁴ரதி - கலைமகளின், ஸரஸ்வதியின் வடிவானவளே
- பா⁴ர்க³வி - பிருகு மகரிஷியின் மகளே, லக்ஷ்மி தேவியே
- ஸோ²க - துக்கங்களை, துன்பங்களை
- வினாஸி²னி - முழுமையாக அழிப்பவளே
- ரத்ன மயே - ரத்தினங்கள் நிறைந்தவளே
- மணி மய - மணிகள், முத்துக்கள் பதிக்கப்பட்ட
- பூ⁴ஷித - அலங்கரிக்கப்பட்ட
- கர்ண - காதணிகளை
- விபூ⁴ஷண - அணிந்திருப்பவளே
- ஸா²ந்தி - அமைதி, சாந்தம்
- ஸமாவ்ருத - நிறைந்த
- ஹாஸ்ய முகே² - புன்னகை தவழும் முகத்தைக் கொண்டவளே
- நவ நிதி⁴ - ஒன்பது வகையான செல்வங்களையும்
- தா³யினி - தருபவளே
- கலி மல - கலியுகத்தின் பாவங்களை, அழுக்குகளை
- ஹாரிணி - போக்குபவளே
- காமித - விரும்பிய
- ப²லப்ரத³ - பலன்களை அளிக்கும்
- ஹஸ்த யுதே - கைகளைக் கொண்டவளே
- ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
- மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
- வித்³யா லக்ஷ்மீ - கல்விச் செல்வத்தை அருளும் வித்யா லட்சுமியே
- ஸதா³ - எப்போதும்
- பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக
தேவர்கள் துதிக்கும் தலைவியே, கலைமகளுக்குத் தலைவியே, பிருகு முனிவரின் திருமகளே, துயரம் தீர்ப்பவளே, ரத்தின மயமானவளே, நவமணி பதித்த குண்டலம் அணிந்தவளே, அமைதி நிலவும் புன்னகை முகத்தை உடையவளே, கலியுக பாவங்களைத் தொலைப்பவளே, வேண்டியோர் விரும்பியவுடன் கலைகளை அருளிப் பயன்களை வழங்கும் திருக்கரங்களை உடையவளே, மதுசூதனின் மனைவியே, வித்யா லக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் என வேண்டினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment