About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label ஸ்ரீ அச்யுதா அஷ்டகம். Show all posts
Showing posts with label ஸ்ரீ அச்யுதா அஷ்டகம். Show all posts

Sunday, 16 August 2026

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 9

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

பலச்ருதி

9. அச்யுதஸ் யாஷ்டகம் 
ய: படே²  தி³ஷ்டத³ம் 
ப்ரேமத: ப்ரத் யஹம் 
பூருஷ: ஸஸ் ப்ருஹம்|
வ்ருத்தத: ஸுந்த³ரம் 
கர்த்ரு விஸ்²வம் ப⁴ரம் 
தஸ்ய வஸ்²யோ ஹரிர் 
ஜாயதே ஸத்வரம்||

  • அச்யுதஸ்ய - அச்யுதனுடைய, அழிவில்லாத இறைவனுடைய 
  • அஷ்டகம் - எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தத் துதியை 
  • யஃ - எவன் ஒருவன்
  • படே²த் - படிக்கிறானோ, பாராயணம் செய்கிறானோ
  • தி³ஷ்டத³ம் - விரும்பிய நன்மைகளை, பலன்களைக் கொடுக்கக்கூடிய இந்த ஸ்தோத்திரத்தை  
  • ப்ரேமதஃ - அன்போடு, பக்தியோடு
  • ப்ரத் யஹம் - தினமும், நாள்தோறும்
  • பூருஷஸ் - மனிதன்
  • ஸஸ் ப்ருஹம் - ஆவலோடு, ஈடுபாட்டோடு 
  • வ்ருத்ததஸ் - அமைப்பிலும் சந்தத்திலும்
  • ஸுந்த³ரம் - அழகியதாக இருக்கும், இந்த அஷ்டகத்தை 
  • கர்த்ரு - உலகைப் படைத்தவனும்
  • விஸ்²வம் ப⁴ரம் - அகிலத்தைத் தாங்குபவனுமாகிய, இறைவனைப் பற்றிய துதி  
  • தஸ்ய - அவனுக்கு, அந்தப் பக்தனுக்கு 
  • வஸ்²யோ - வசம் உடையவனாக, கட்டுப்பட்டவனாக
  • ஹரிர் - ஸ்ரீ ஹரி, மகாவிஷ்ணு 
  • ஜாயதே - ஆகிறான்
  • ஸத்வரம் - மிக விரைவில், உடனடியாக

இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரம் வேண்டிய வற்றை வேண்டியபடியே கொடுக்கும் மகிமை வாய்ந்தது. அழகிய விருத்தம் கொண்டது. உலக த்தையே காக்கும்  வல்லமை படைத்தது. இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் யார் தினமும் படிக்கிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீமன்நாராயணன் விரைவில்  திருவருள் புரிந்து சகல மங்களங்களையும் அருள்வார்.

||இதி ஸ்ரீ அச்யுதாஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 8

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

8. குஞ்சிதை: குந்தலைர் 
பாஜமானானனம் 
ரத்ன மௌளிம் லஸத் 
குண்ட³லம் க³ண்ட³யோ:|
ஹார கேயூரகம் 
கங்கணப் ப்ரோஜ் வலம் 
கிங்கிணீ மஞ்சுளம் 
ஸ்²யாமளம் தம் ப⁴ஜே||

  • குஞ்சிதைஹ் - வளைந்த, சுருண்ட 
  • குந்தலைர் - தலை முடியால், கூந்தலால்
  • பாஜமான ஆனனம் - பிரகாசிக்கும் முகத்தை உடையவரை
  • ரத்ன - ரத்தினங்கள் பதித்த
  • மௌளிம் - கிரீடத்தை அணிந்தவரை
  • லஸத் - ஒளிர்கின்ற, பிரகாசிக்கின்ற
  • குண்ட³லம் - காதணிகள்
  • க³ண்ட³யோ: - கன்னங்களில், பிரதிபலிப்பவரை 
  • ஹார - முத்து மாலைகள், நெக்லஸ்கள்
  • கேயூரகம் - தோள்வளைகள், அணிகலன் 
  • கங்கண - கைகளில் அணியும் காப்புகள், வளையல்கள்
  • ப்ரோஜ் வலம் - மிக அதிகமாக பிரகாசிப்பவரை
  • கிங்கிணீ - சதங்கைகளின், கால் மணிகளின்
  • மஞ்சுளம் - இனிய ஓசையை உடையவரை
  • ஸ்²யாமளம் - கருநீல நிறமுடையவரை, மேகவண்ணனை 
  • தம் - அந்த இறைவனை
  • பஜே - நான் வணங்குகிறேன், துதிக்கிறேன்

சுருண்ட கேசம் அணிசெய்யும் மந்தஹாச முகமுடையவனே, ஒளிவீசும் ரத்னமயமான கிரீடம் தரித்தவனே, கன்னங்களில் இழையோடி பிரகாசிக்கின்ற  குண்டலங்கள் தரித்தவனே, ஹாரம், தோள்வளை ஆகிய அணிகலன்களைச் சூடியவனே, கங்கணங்கள் ஜொலிக்கத் திகழ்பவனே, இடுப்பில் சிறுசிறு மணிகள்  தரித்து அழகு பொலிந்தவனே, ச்யாமளா, கோபாலா, நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 7

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

7. வித்³யுது³த்³ யோதவத் 
ப்ரஸ்பு²ரத் வாஸஸம் 
ப்ராவ்ருட³ம் போ⁴த³வத் 
ப்ரோல்ல ஸத்³ விக்³ரஹம்|
வன்யயா மாலயா 
ஸோ²பி⁴தோ ர:ஸ்த²லம் 
லோஹி தாங் க்⁴ரித்³ வயம் 
வாரி ஜாக்ஷம் ப⁴ஜே||

  • வித்³யுது³த்³ யோதவத் - மின்னலின் ஒளியைப் போல
  • ப்ரஸ்பு²ரத் - பிரகாசிக்கின்ற, ஒளி வீசுகின்ற
  • வாஸஸம் - ஆடையை அணிந்திருப்பவர்
  • ப்ராவ்ருட³ம் போ⁴த³வத் - மழைக் காலத்து மேகத்தைப் போல, கருமையானவர் 
  • ப்ரோல்ல ஸத்³ - மிக அதிகமாக விளங்குகின்ற, ஒளி வீசுகின்ற
  • விக்³ரஹம் - திருமேனியை உடையவர், உடலமைப்பைக் கொண்டவர் 
  • வன்யயா - காட்டுப் பூக்களால் ஆன
  • மாலயா - மாலையினால்
  • ஸோ²பி⁴தோ - அழகு பெற்ற, விளங்குகின்ற
  • உரஸ் ஸ்த²லம் - மார்பகப் பகுதியை உடையவர்
  • லோஹி தாங் க்⁴ரித்³வயம் - சிவந்த இரு திருவடிகளைக் கொண்டவர்
  • வாரி ஜாக்ஷம் - தாமரை மலர் போன்ற கண்களை உடையவர்
  • வயம் - நாங்கள் அனைவரும்

ப⁴ஜே - அத்தகைய இறைவனை  வணங்குகிறோம், வழிபடுகிறோம்
மின்னலின் ஒளி போல் பிரகாசிக்கும் பீதாம் பரத்தை அணிந்தவனே, மழை காலத்து மேகம் போல் கம்பீரமான சரீரம் கொண்டவனே, வன மாலையால் ஒளி சிந்தும்  திருமார்புடையவனே, சிவந்த பாதங்களை உடையவனே, செந்தாமரைக் கண்ணா, நமஸ்காரம். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 6

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

6. தே⁴னுகா ரிஷ்டகோ 
நிஷ்டக்ருத்³ த்³வேஷிணாம் 
கேஸி²கா கம்ஸ ஹ்ருத் 
வம்ஸி²கா வாத³க:|
பூதனா கோபக 
ஸூரஜா கே²லனோ 
பா³ல கோ³பாலக: 
பாது மாம் ஸர்வதா³||

  • தே⁴னுகா - தேனுகாசுரன் எனும் அரக்கன் 
  • அரிஷ்ட - அரிஷ்டாசுரன் எனும் அரக்கன் 
  • கோ - பசுக்கள்
  • நிஷ்டக்ருத்³ - துயரத்தை நீக்கியவர், அல்லது காப்பவர் 
  • த்³வேஷிணாம் - பகைவர்களை
  • கேஸி²கா - கேசி, எனும் அரக்கன் 
  • கம்ஸ - கம்சன்
  • ஹ்ருத் - ஆகியோரின்  உயிரை எடுத்தவர்
  • வம்ஸி²கா - புல்லாங்குழல்
  • வாத³கஃ - வாசிப்பவர்
  • பூதனா - பூதனை எனும் அரக்கிக்கு 
  • கோபக - கோபம் கொண்டவர், அல்லது தண்டித்தவர் 
  • ஸூரஜா - யமுனை நதிக்கரையில்
  • கே²லனோ - விளையாடியவர்
  • பா³ல - குழந்தை வடிவ
  • கோ³பாலகஃ - கோபாலன், பசுக்களை காப்பவர் 
  • பாது - காக்கட்டும்
  • மாம் - என்னை
  • ஸர்வதா³ - எப்போதும்

தேனுகாசுரனை அழித்தவனே, எதிரிகளை கலங்கச் செய்து சிதறடித்தவனே, கேசி என்ற அரக்கனை அடிபணிய வைத்தவனே, கம்ஸனை வதம் செய்தவனே,  வேணுகானம் செய்து எல்லோர் மனதையும் மயக்கி ஈர்க்கின்றவனே, பூதனையைக் கோபமுறச் செய்து லீலை புரிந்தவனே, யமுனையில் விளையாடி  மகிழ்கின்றவனே, பால கோபாலனே, நமஸ்காரம். எப்பொழுதும் என்னைக் காத்தருள்வாய் பரம் பொருளே.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 5

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

5. ராக்ஷஸ க்ஷோபி⁴த: 
ஸீதயா ஸோ²பிதோ 
த³ண்ட³ காரண்ய பூ⁴ 
புண்யதா காரண:|
லக்ஷ்மணோ னான்விதோ 
வானரை: ஸேவிதோ:
அக³ஸ்த்ய ஸம்பூஜிதோ 
ராக⁴வ: பாது மாம்||

  • ராக்ஷஸ க்ஷோபி⁴தஸ் - அரக்கர்களை நடுங்கச் செய்தவர், அரக்கர்களை அழித்தவர்
  • ஸீதயா - சீதா பிராட்டியோடு
  • ஸோ²பிதோ - பிரகாசிப்பவர், அழகுடன் விளங்குபவர்
  • த³ண்ட³ காரண்ய - தண்டகாரண்யம் என்னும்
  • பூ⁴ - பூமிக்கு, காட்டிற்கு 
  • புண்யதா - புனிதத்தன்மையை, நன்மையைக் கொடுத்த
  • காரணஹ - காரணமானவர்
  • லக்ஷ்மணோ - லட்சுமணனால்
  • அன்விதோ - எப்போதும்  பின் தொடரப்பட்டவர், லட்சுமணனைத் துணையாகக் கொண்டவர்
  • வானரைஸ் - வானரங்களால், குரங்குப் படையினரால் 
  • ஸேவிதோஹோ - வணங்கப்பட்டவர், சேவை செய்யப்பட்டவர்
  • அக³ஸ்த்ய - அகத்திய முனிவரால்
  • ஸம்பூஜிதோ - மிகச் சிறப்பாக வழிபடப்பட்டவர்
  • ராக⁴வஃ - ரகு வம்சத்தில் பிறந்த அந்த ஸ்ரீராமன்
  • பாது - காப்பாற்றட்டும்
  • மாம் - என்னை

விஸ்வாமித்திரரின் யாகத்துக்கு இடையூறு விளைவித்த அரக்கர்களைக் கலங்கடித்தவனே, சீதையின் நாயகனாகப் பரிமளிப்பவனே, தன் வருகையால்  தண்டகாரண்ய பூமியையே பரிசுத்தமாக்கியவனே, என்றும் லக்ஷ்மணனின் சேவையை அனுபவிப்பவனே, வானரர்களால் கொண்டாடப் பட்டவனே, அகஸ்தியரால்  பூஜிக்கப் பட்டவனே, ஸ்ரீராமா, நமஸ்காரம். என்னைக் காத்தருள்வாய் பரம் பொருளே.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 4

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

4. க்ருஷ்ண கோ³விந்த³ ஹே ராம நாராயண 
ஸ்ரீபதே வாஸுதே³வா ஜித ஸ்ரீநிதே⁴|
அச்யுதானந்த ஹே மாத⁴வா தோ⁴க்ஷஜ 
த்³வாரகா நாயக த்³ரௌபதீ³ ரக்ஷக||

  • க்ருஷ்ண - இருண்ட நிறமுடையவன், கவர்ந்திழுப்பவன், கண்ணன் 
  • கோ³விந்த - பசுக்களைக் காப்பவன், பூமியைக் மீட்டவன்
  • ஹே - ஓ!
  • ராம - மனதிற்கு மகிழ்ச்சி தருபவன்
  • நாராயண - நாரங்களை, ஜீவன்களை  இருப்பிடமாகக் கொண்டவன், பரம்பொருள்
  • ஸ்ரீபதே - லட்சுமியின் மணாளனே, செல்வத்தின் அதிபதியே 
  • வாசுதே³வா - வசுதேவரின் மகனே, அனைத்து உலகிலும் வசிப்பவனே
  • அஜித - யாராலும் வெல்லப்பட முடியாதவனே
  • ஸ்ரீநிதே⁴ - மங்களம் மற்றும் செல்வத்தின் இருப்பிடமே
  • அச்யுத - நழுவாதவன், தன் பக்தர்களை என்றும் கைவிடாதவன்
  • ஆனந்த - எல்லையற்ற பேரின்ப வடிவமானவனே
  • ஹே - ஓ! 
  • மாத⁴வ - லட்சுமியின் கணவனே, அறிவின் அதிபதியே
  • அதோ⁴க்ஷஜ - புலன்களுக்கு எட்டாதவனே, தலைசிறந்தவனே 
  • த்³வாரகா - துவாரகை நகரத்தின்
  • நாயக - தலைவனே
  • த்³ரௌபதீ³ - திரௌபதியை
  • ரக்ஷக - ஆபத்திலிருந்து காப்பாற்றியவனே, பாதுகாத்தவனே

ஹரே கிருஷ்ணா, வேதங்களால் அறியத் தகுந்தவனே, ஹரே ராமா, பகவான் நாராயணா, ஸ்ரீபதியே, ஓ வாசுதேவனே, யாராலும் வெற்றி கொள்ள முடியாதவனே,  அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியே, அச்யுதா, அனந்தா, ஹே மாதவா, திவ்யஞானப் பிரகாசனே, துவாரகா நாதனே, திரௌபதியைக் காத்தவனே உனக்கு  நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 3

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

3. விஷ்ணவே ஜிஷ்ணவே 
ஸ²ங்கனே சக்ரிணே 
ருக்மிணீ ராகி³ணே 
ஜானகீ ஜானயே|
வல்லவீ  வல்லபா⁴யார் 
சிதா யாத்மனே 
கம்ஸ வித்⁴வம் ஸினே 
வம்ஸி²னே தே நம:||

  • விஷ்ணவே - எங்கும் நிறைந்திருப்பவருக்கு
  • ஜிஷ்ணவே - என்றும் வெற்றி பெறுபவருக்கு
  • ஸ²ங்கனே - பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்தியவருக்கு
  • சக்ரிணே - சுதர்சனம் என்னும் சக்கரத்தை உடையவருக்கு
  • ருக்மிணீ - ருக்மிணி தேவியின் மீது
  • ராகி³ணே - அன்பு, காதல்  கொண்டவருக்கு
  • ஜானகீ - ஜானகி தேவியின், சீதையின் 
  • ஜானயே - கணவராக இருப்பவருக்கு
  • வல்லவீ - கோபியர்களின்
  • வல்லபா⁴ய - அன்பிற்குரிய தலைவருக்கு
  • அர்ச்சிதாய - யாவராலும் பூஜிக்கப்படுபவருக்கு
  • ஆத்மனே - எல்லா உயிர்களின் ஆன்மாவாக விளங்குபவருக்கு
  • கம்ஸ - கம்ஸனை
  • வித்⁴வம் ஸினே - அழித்தவருக்கு
  • வம்ஸி²னே - புல்லாங்குழல் வாசிப்பவருக்கு
  • தே - அத்தகைய உமக்கு
  • நம - நமஸ்காரம், வணக்கம் 

எங்கும் வியாபித்திருப்பவனே, வெற்றி வீரனே, சங்கைத் தரித்தவனே, சக்ராயுதம் ஏந்தினவனே, ருக்மிணியின் நாயகனே, கோபிகைகளுக்குப் பிரியமானவனே,  பக்தர்களால் அர்ச்சிக்கப்படுபவனே, உலகிற்கே ஆத்மாவானவனே, கம்ஸனை அழித்தவனே, வேணுகானம் இசைப்பவனே கிருஷ்ணா நமஸ்காரம். ஜானகியின்  நாயகனே ராமச்சந்திர மூர்த்தியே நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 2

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

2. அச்யுதம் கேஸ²வம் 
ஸத்யபா⁴மா த⁴வம் 
மாத⁴வம் ஸ்ரீத⁴ரம் 
ராதி⁴கா ராதி⁴தம்|
இந்தி³ரா மந்தி³ரம் 
சேதஸா ஸுந்த³ரம் 
தே³வகீ நந்த³னம் 
நந்த³ஜம் ஸந்த³தே⁴||

  • அச்யுதம் - நழுவாதவன், அழிவில்லாதவன், என்றும் வீழாதவன்
  • கேஸ²வம் - அழகான தலை முடி உடையவன், கேசி என்ற அரக்கனை அழித்தவன்
  • ஸத்யபா⁴மா த⁴வம் - சத்யபாமாவின் கணவன்
  • மாத⁴வம் - லட்சுமியின் கணவன், அறிவுக்கு அதிபதி
  • ஸ்ரீத⁴ரம் - லட்சுமியைத் தன் மார்பில் தாங்குபவன்
  • ராதி⁴கா ராதி⁴தம் - ராதையால் ஆராதிக்கப்படுபவன், வழிபடப்படுபவன்
  • இந்தி³ரா மந்தி³ரம் - லட்சுமி தேவி வசிக்கும் இருப்பிடம்
  • சேதஸா ஸுந்த³ரம் - மனதால் நினைக்க அழகாக இருப்பவன், தூய்மையான உள்ளம் கொண்டவன்
  • தே³வகி நந்த³னம் - தேவகியின் மைந்தன், தேவகிக்கு மகிழ்ச்சி அளிப்பவன்
  • நந்த³ஜம் - நந்தகோபனின் மகன்
  • ஸந்த³தே⁴ - எப்போதும் வணங்குகிறேன், மனதாரத் துதிக்கிறேன்

அழிவற்றவனே, மனத் துயரங்களைப் போக்குபவனே, சத்ய பாமாவின் நாயகனே, மஹாலக்ஷ்மியை இதயத்தில் ஏற்றுக்கொண்ட அவளது பதியே, ராதையினால்  பூஜிக்கப்பட்டவனே, மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடம் அளித்தவனே, அழகுக்கே அழகு செய்பவனே, தேவகியின் மைந்தனே, நந் தகோபரின் பிள்ளையே, ஸ்ரீகோபாலா  உம்மை மனதால் தியானம் செய்து நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 1

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

1. அச்யுதம் கேஸ²வம் ராம நாராயணம் 
க்ருஷ்ண தா³மோத³ரம் வாஸுதே³வம் ஹரிம்|
ஸ்ரீத⁴ரம் மாத⁴வம் கோ³பிகா வல்லப⁴ம் 
ஜானகீ நாயகம் ராமச்சந்த்³ரம் ப⁴ஜே||

  • அச்யுதம் - நழுவாதவன், அழிவில்லாதவன், தன் நிலையில் இருந்து என்றும் வீழாதவன் 
  • கேஸ²வம் - கேசி என்ற அரக்கனை அழித்தவன், அழகான தலைமுடி உடையவன் 
  • ராம நாராயணம் - ராமனாக அவதரித்த நாராயணன்
  • க்ருஷ்ண - அனைவரையும் தன் பால் ஈர்க்கும் கிருஷ்ணன், கருமை நிறத்தவன்
  • தா³மோத³ரம் - யசோதையால் வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்ட கண்ணன்
  • வாஸுதே³வம் - வசுதேவரின் மைந்தன், எங்கும் நிறைந்திருப்பவன்
  • ஹரிம் - பாவங்களைப் போக்குபவன், திருமால்
  • ஸ்ரீத⁴ரம் - லட்சுமியை தன் மார்பில் தாங்கியவன்
  • மாத⁴வம் - லட்சுமியின் மணாளன், அறிவுக்கு அதிபதி
  • கோ³பிகா வல்லப⁴ம் - கோபியர் குலப் பெண்களின் அன்பிற்குரிய தலைவன்
  • ஜானகீ நாயகம் - ஜனகரின் மகளான சீதையின் கணவன்
  • ராமச்சந்த்³ரம் - சந்திரன் போன்ற குளுமையான முகமுடைய ராமபிரான்
  • ப⁴ஜே - இப்படிப்பட்ட இறைவனை நான் வணங்குகிறேன், துதிக்கிறேன் 

அழிவில்லாதவனும், கேசி அரக்கனை அழித்தவனும், ராமபிரானாக வந்த நாராயணனும், அனைவரையும் ஈர்க்கும் கிருஷ்ணனும், வயிற்றில் கயிறு கட்டப்பட்ட தாமோதரனும், வசுதேவர் மைந்தனும், பாவங்களை அழிக்கும் ஹரியும், லட்சுமியை மார்பில் தாங்கிய ஸ்ரீதரனும், மாதவனும், கோபிகைகளின் அன்பிற்குரியவனும், ஜானகியின் நாயகனுமாகிய ராமச்சந்திர மூர்த்தியை நான் எப்போதும் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||