ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
6. தே⁴னுகா ரிஷ்டகோ
நிஷ்டக்ருத்³ த்³வேஷிணாம்
கேஸி²கா கம்ஸ ஹ்ருத்
வம்ஸி²கா வாத³க:|
பூதனா கோபக
ஸூரஜா கே²லனோ
பா³ல கோ³பாலக:
பாது மாம் ஸர்வதா³||
- தே⁴னுகா - தேனுகாசுரன் எனும் அரக்கன்
- அரிஷ்ட - அரிஷ்டாசுரன் எனும் அரக்கன்
- கோ - பசுக்கள்
- நிஷ்டக்ருத்³ - துயரத்தை நீக்கியவர், அல்லது காப்பவர்
- த்³வேஷிணாம் - பகைவர்களை
- கேஸி²கா - கேசி, எனும் அரக்கன்
- கம்ஸ - கம்சன்
- ஹ்ருத் - ஆகியோரின் உயிரை எடுத்தவர்
- வம்ஸி²கா - புல்லாங்குழல்
- வாத³கஃ - வாசிப்பவர்
- பூதனா - பூதனை எனும் அரக்கிக்கு
- கோபக - கோபம் கொண்டவர், அல்லது தண்டித்தவர்
- ஸூரஜா - யமுனை நதிக்கரையில்
- கே²லனோ - விளையாடியவர்
- பா³ல - குழந்தை வடிவ
- கோ³பாலகஃ - கோபாலன், பசுக்களை காப்பவர்
- பாது - காக்கட்டும்
- மாம் - என்னை
- ஸர்வதா³ - எப்போதும்
தேனுகாசுரனை அழித்தவனே, எதிரிகளை கலங்கச் செய்து சிதறடித்தவனே, கேசி என்ற அரக்கனை அடிபணிய வைத்தவனே, கம்ஸனை வதம் செய்தவனே, வேணுகானம் செய்து எல்லோர் மனதையும் மயக்கி ஈர்க்கின்றவனே, பூதனையைக் கோபமுறச் செய்து லீலை புரிந்தவனே, யமுனையில் விளையாடி மகிழ்கின்றவனே, பால கோபாலனே, நமஸ்காரம். எப்பொழுதும் என்னைக் காத்தருள்வாய் பரம் பொருளே.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment