ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
2. அச்யுதம் கேஸ²வம்
ஸத்யபா⁴மா த⁴வம்
மாத⁴வம் ஸ்ரீத⁴ரம்
ராதி⁴கா ராதி⁴தம்|
இந்தி³ரா மந்தி³ரம்
சேதஸா ஸுந்த³ரம்
தே³வகீ நந்த³னம்
நந்த³ஜம் ஸந்த³தே⁴||
- அச்யுதம் - நழுவாதவன், அழிவில்லாதவன், என்றும் வீழாதவன்
- கேஸ²வம் - அழகான தலை முடி உடையவன், கேசி என்ற அரக்கனை அழித்தவன்
- ஸத்யபா⁴மா த⁴வம் - சத்யபாமாவின் கணவன்
- மாத⁴வம் - லட்சுமியின் கணவன், அறிவுக்கு அதிபதி
- ஸ்ரீத⁴ரம் - லட்சுமியைத் தன் மார்பில் தாங்குபவன்
- ராதி⁴கா ராதி⁴தம் - ராதையால் ஆராதிக்கப்படுபவன், வழிபடப்படுபவன்
- இந்தி³ரா மந்தி³ரம் - லட்சுமி தேவி வசிக்கும் இருப்பிடம்
- சேதஸா ஸுந்த³ரம் - மனதால் நினைக்க அழகாக இருப்பவன், தூய்மையான உள்ளம் கொண்டவன்
- தே³வகி நந்த³னம் - தேவகியின் மைந்தன், தேவகிக்கு மகிழ்ச்சி அளிப்பவன்
- நந்த³ஜம் - நந்தகோபனின் மகன்
- ஸந்த³தே⁴ - எப்போதும் வணங்குகிறேன், மனதாரத் துதிக்கிறேன்
அழிவற்றவனே, மனத் துயரங்களைப் போக்குபவனே, சத்ய பாமாவின் நாயகனே, மஹாலக்ஷ்மியை இதயத்தில் ஏற்றுக்கொண்ட அவளது பதியே, ராதையினால் பூஜிக்கப்பட்டவனே, மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடம் அளித்தவனே, அழகுக்கே அழகு செய்பவனே, தேவகியின் மைந்தனே, நந் தகோபரின் பிள்ளையே, ஸ்ரீகோபாலா உம்மை மனதால் தியானம் செய்து நமஸ்கரிக்கிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment