ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
7. ஸமஸ்த கோ³ப நந்த³னம்
ஹ்ருதாம்பு³ஜைக மோத³னம்
நமாமி குஞ்ஜ மத்⁴யக³ம்
ப்ரஸன்ன பா⁴நு ஸோ²ப⁴னம்|
நிகாம காம தா³யகம்
த்³ரு க³ந்த சாரு ஸாயகம்
ரஸால வேணு கா³யகம்
நமாமி குஞ்ஜ நாயகம்||
- ஸமஸ்த - எல்லா, அனைத்து
- கோ³ப - கோபியர்கள் மற்றும் இடையர்களுக்கு
- நந்த³னம் - மகிழ்ச்சியை அளிப்பவரை, மகிழ்விப்பவரை
- ஹ்ருத் - இதயம் ஆகிய
- அம்பு³ஜ - தாமரைக்கு
- ஏக - ஒப்பற்ற, ஒரே
- மோத³னம் - மகிழ்ச்சியைத் தருபவரை, மலர்ச்சியைத் தருபவரை
- நமாமி - நான் வணங்குகிறேன்
- குஞ்ஜ - பூஞ்சோலையின், மண்டபத்தின்
- மத்⁴யக³ம் - நடுவில் வீற்றிருப்பவரை
- ப்ரஸன்ன - பிரகாசமான, புன்னகை பூத்த
- பா⁴நு - சூரியனைப் போன்ற
- ஸோபனம் - மங்களகரமான ஒளியைக் கொண்டவரை
- நிகாம - வேண்டுமளவு, நிறைய
- காம - விருப்பங்களை
- தா³யகம் - வழங்குபவரை, கொடுப்பவரை
- த்³ருக்³ - கண்கள் ஆகிய
- அந்த - கடைக் கோடியிலிருந்து, கடைக்கண் பார்வையிலிருந்து
- சாரு - அழகான
- ஸாயகம் - அம்புகளைத் தொடுப்பவரை, கடைக்கண் பார்வை என்னும் அம்பால் ஈர்ப்பவரை
- ரஸால - இனிமையான
- வேணு - புல்லாங்குழலை
- கா³யகம் - இசைப்பவரை, பாடுவரை
- நமாமி - நான் வணங்குகிறேன்
- குஞ்ஜ - பூஞ்சோலையின்
- நாயகம் - தலைவரை, கிருஷ்ணரை
கோகுலத்தின் கோபியர் அனைவருக்கும் ஆனந்தம் அளிப்பவனே, பக்தர்களின் இதயக்கமலத்தை ஆனந்தத்தால் மலரச் செய்பவனே, உலகுக்கு ஒளியூட்டும் சூரியனைப் போன்று பிரகாசத்துடன், கவரும் புன்னகையுடன் தோன்றுபவனே, பிருந்தாவனம் என்னும் தோப்பின் மத்தியில் கோபியருடன் நடனமாடும் பிருந்தாவன கிருஷ்ணா, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். பக்தர்களின் ஆசைகளை முற்றிலும் நிறைவேற்றுபவனே, அம்பை ஒத்த, பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய பார்வையை கொண்டவனே, இனிய, மதுரமான கானத்தை புல்லாங்குழலில் இசைப்பவனே, ஸ்ரீகிருஷ்ணா, பிருந்தாவன நாயகா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment