ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
6. கு³ணாகரம் ஸுகா²கரம்
க்ருபாகரம் க்ருபாபரம்
ஸுரத்³விஷன்னிகந்த³னம்
நமாமி கோ³பனந்த³னம்|
நவீனகோ³பனாக³ரம்
நவீனகேலிலம்படம்
நமாமி மேக⁴ஸுந்த³ரம்
தடி³த்ப்ரபா⁴லஸத்படம்||
- கு³ணாகரம் - நற்பண்புகளின் இருப்பிடமானவரை
- ஸுகா²கரம் - பேரின்பத்தை அளிப்பவரை
- க்ருபாகரம் - கருணை புரிபவரை
- க்ருபாபரம் - கருணையே வடிவானவரை
- ஸுரத்³ விஷன் நிகந்த³னம் - தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவரை
- நமாமி - வணங்குகிறேன்
- கோ³ப நந்த³னம் - நந்தகோபனின் மகனான ஸ்ரீ கிருஷ்ணரை
- நவீன கோ³ப நாக³ரம் - ஆயர்பாடியில் இருக்கும் இளமையான, அழகான தலைவனை
- நவீன கேலி லம்படம் - புத்தம் புதிய லீலைகளை, விளையாட்டுகளை புரிவதில் ஆர்வம் உள்ளவரை
- நமாமி - வணங்குகிறேன்
- மேக⁴ ஸுந்த³ரம் - நீல மேகத்தைப் போல அழகான நிறம் கொண்டவரை
- தடி³த் ப்ரபா⁴ லஸத் படம் - மின்னலின் ஒளியைப் போல பிரகாசிக்கும் பீதாம்பரத்தை, மஞ்சள் ஆடையை உடுத்தியிருப்பவரை
நற்குணங்கள், ஆனந்தம், கருணை இவற்றின் களஞ்சியமாக விளங்குபவனே, தேவர்களின் எதிரிகளை அழித்து கோபர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். நித்தம் குறும்புத்தனமான லீலைகளை நூதனமாக புரிபவனே, லீலா விநோதங்களின் விளைவுகளில் மகிழ்ச்சி கொள்ளும் இடையர் தலைவனே, கருமேக நிறத்தை கொண்ட உள்ளம் கவர் அழகிய கள்வனே, மின்னல் ஒளியை போல் ஜொலிக்கும் மஞ்சள் பட்டு பீதாம்பரத்தை அணிந்தவனே, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment