ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
9. யதா³ ததா³ யதா² ததா²
ததை²வ க்ருஷ்ண ஸத் கதா²
மயா ஸதை³வ கீ³யதாம்
ததா² க்ருபா விதீ⁴யதாம்|
ப்ரமாணி காஷ்டக த்³வயம்
ஜபத் யதீ⁴த்ய ய: புமான்
ப⁴வேத் ஸ நந்த³ நந்த³னே
ப⁴வே ப⁴வே ஸு ப⁴க்திமான்||
- யதா³ - எப்பொழுதெல்லாம்
- ததா³ - அப்பொழுதெல்லாம்
- யதா² - எந்தெந்த வழிகளில், எவ்விதமாக
- ததா² - அந்தந்த வழிகளில், அவ்விதமாக
- ததை²வ - அதேபோலவே
- க்ருஷ்ண ஸத் கதா² - கிருஷ்ணரின் மகிமை மிக்க உன்னதமான கதைகள், லீலைகள்
- மயா - என்னால்
- ஸதை³வ - எப்போதும், எப்பொழுதும்
- கீ³யதாம் - பாடப் பட வேண்டும், துதிக்கப் பட வேண்டும்
- ததா² - மேலும், அப்படியே
- க்ருபா - உமது கருணை, அருள்
- விதீ⁴யதாம் - எனக்கு வழங்கப் பட வேண்டும், பொழியப் பட வேண்டும்
- ப்ரமாணிக அஷ்டக த்³வயம் - பிரமாணிகா என்னும் சந்த அமைப்பில் உள்ள இந்த இரண்டு அஷ்டகங்களை, ஸ்தோத்திரங்களை
- ஜபதி - உச்சரித்து, ஜபம் செய்து
- அதீ⁴த்ய - படித்து, மனனம் செய்து
- ய: - எந்தவொரு
- புமான் - மனிதன், நபர்
- ப⁴வேத் - ஆகிறானோ
- ஸ: - அவன்
- நந்த³ நந்த³னே - நந்தகோபனின் மகனான ஸ்ரீ கிருஷ்ணரிடம்
- ப⁴வே ப⁴வே - பிறவி தோறும், ஒவ்வொரு பிறவியிலும்
- ஸு ப⁴க்திமான் - மிகச் சிறந்த பக்தி உடையவனாக
- ப⁴வேத் - மாறுவான், ஆகிவிடுவான்
என் மீது உங்கள் கருணை என்றும் நிலைத்து இருக்க அருள் புரியுங்கள். நான் எந்நிலையில் இருப்பினும், தங்களின் லீலா விநோதங்களின் புகழை எப்போதும் பாடிக் கொண்டிருக்க என்னை ஆசீர்வதியுங்கள். எவர் ஒருவர் இந்த ஸ்ரீகிருஷ்ண அஷ்டகத்தை பாராயணம் அல்லது ஜபம் செய்கிறாரோ, அவர் தன் அனைத்துப் பிறப்புகளிலும், கிருஷ்ணனின் மீது பக்தியுடன் பிறப்பர்.
||இதி ஸ்ரீமச் ச²ங்கராசார்ய க்ருதம் ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் ஸம்பூர்ணம்||
|| ஸ்ரீ க்ருஷ்ணார்பணமஸ்து||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment