||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
நிரவதி⁴ ஸுக² மிந்தி³ரா கடாக்ஷம்
க்ஷபித ஸுரேந்த்³ர சதுர் முகா²தி து³:க²ம்|
நரவர மநிஸ²ம் நதோஸ்மி ராமம்
வரத³ மஹம் வர சாப பா³ண ஹஸ்தம்||
- நிரவதி⁴ - எல்லையற்ற
- ஸுக²ம் - ஆனந்தம்
- இந்தி³ரா - திருமகள், இலட்சுமி
- கடாக்ஷம் - அருட்பார்வை
- க்ஷபித - நீக்கியவர்
- ஸுரேந்த்³ர - தேவர்களின் தலைவன்
- சதுர் முக² - நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மா
- ஆதி - முதலியோரின்
- து³ஃக²ம் - துன்பம்
- நரவரம் - மனிதர்களில் சிறந்தவர்
- அநிஸ²ம் - இடைவிடாமல், எப்பொழுதும்
- நதோஸ்மி - வணங்குகிறேன்
- ராமம் - இராமரை
- வரத³ம் - வரம் அளிப்பவர்
- அஹம் - நான்
- வர - சிறந்த
- சாப - வில்
- பா³ண - அம்பு
- ஹஸ்தம் - கையில் கொண்டவர்
திருமகளின் அருட்பார்வையால் எல்லையற்ற ஆனந்தத்தை உடையவரும், தேவேந்திரன், பிரம்மன் முதலியோரின் துன்பங்களை நீக்கியவரும், மனிதர்களில் சிறந்தவரும், கையில் சிறந்த வில்லையும் அம்பையும் ஏந்தியவரும், வரங்களை அருளுபவருமான இராமரை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
