About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 4 October 2026

ஜடாயுவின் இராம ஸ்தோத்திரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திரி பு⁴வந கமநீய ரூப மீத்³யம் 
ரவி ஸ²த பா⁴ஸுர மீஹித: ப்ரதா³நம்|
ஸ²ர நாத³ மநிஸ²ம் ஸூராக³ மூலே 
க்ருத நிலயம் ரகு⁴ நந்த³நம் ப்ரபத்³யே||

  • திரி - மூன்று
  • பு⁴வந - உலகங்கள்
  • கமநீய - அழகான, கவர்ச்சியான
  • ரூபம் - திருமேனி, உருவம்
  • ஈத்³யம் - துதிக்கத் தகுந்தவர்
  • ரவி - சூரியன்
  • ஸ²த - நூறு
  • பாஸுரம் - ஒளி வீசுகின்ற
  • ஈஹித - விரும்பிய
  • ப்ரதா³நம் - வழங்குபவர்
  • ஸ²ர நாத³ - சரணடைந்தவர்களுக்கு
  • அநிஸ²ம் - எப்பொழுதும்
  • ஸூராக³ - தேவர்கள், சான்றோர்
  • மூலே - அடியில்
  • க்ருத - செய்த
  • நிலயம் - இருப்பிடம்
  • ரகு⁴ நந்த³நம் - ரகு குலத்தின் மகிழ்ச்சி, இராமர்
  • ப்ரபத்³யே - சரணடைகிறேன்

மூன்று உலகங்களையும் கவரும் அழகிய திருமேனியைக் கொண்டவரும், தியானிக்கப்பட வேண்டியவரும், நூறு சூரியர்களைப் போன்ற பிரகாசமுடையவரும், தம்மை நாடுவோர் விரும்பியவற்றை அருளுபவரும், எப்பொழுதும் சரணடைந்தவர்களுக்கு அருள் புரிபவருமான ரகுநந்தனாகிய இராமரிடம் நான் சரணடைகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

லக்ஷ்மி ஆலிங்கி³த வாமாங்க³ம் 
ப⁴தாநாம் வரதா³ யகம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் 
நமாமி ருண முக்தயே||

  • லக்ஷ்மி - லட்சுமி தேவியால்
  • ஆலிங்கி³த - தழுவப்பட்ட
  • வாமாங்க³ம் - இடது பக்கத்தை உடையவரை, இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்திருப்பவரை
  • ப⁴தாநாம் - பக்தர்களுக்கு, வழிபடுபவர்களுக்கு
  • வரதா³யகம் - வரங்களை அள்ளித் தருபவரை
  • ஸ்ரீ - மங்களம் நிறைந்த லட்சுமி தேவியுடன் கூடிய
  • ந்ருஸிம்ஹம் - நரசிம்ம மூர்த்தியை
  • மஹா - மிகச் சிறந்த
  • வீரம் - பராக்கிரமம் உடையவரை
  • நமாமி - வணங்குகிறேன்
  • ருண - பிறவி கடன்களிலிருந்து (பொருளுதவி கடன் மற்றும் பாவக் கடன்கள்)
  • முக்தயே - விடுதலை பெறுவதற்காக

மஹாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை தருபவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்