||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
லக்ஷ்மி ஆலிங்கி³த வாமாங்க³ம்
ப⁴தாநாம் வரதா³ யகம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம்
நமாமி ருண முக்தயே||
- லக்ஷ்மி - லட்சுமி தேவியால்
- ஆலிங்கி³த - தழுவப்பட்ட
- வாமாங்க³ம் - இடது பக்கத்தை உடையவரை, இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்திருப்பவரை
- ப⁴தாநாம் - பக்தர்களுக்கு, வழிபடுபவர்களுக்கு
- வரதா³யகம் - வரங்களை அள்ளித் தருபவரை
- ஸ்ரீ - மங்களம் நிறைந்த லட்சுமி தேவியுடன் கூடிய
- ந்ருஸிம்ஹம் - நரசிம்ம மூர்த்தியை
- மஹா - மிகச் சிறந்த
- வீரம் - பராக்கிரமம் உடையவரை
- நமாமி - வணங்குகிறேன்
- ருண - பிறவி கடன்களிலிருந்து (பொருளுதவி கடன் மற்றும் பாவக் கடன்கள்)
- முக்தயே - விடுதலை பெறுவதற்காக
மஹாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை தருபவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment