About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 148

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 148

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 10

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

வாஸுதே³வா ஸ்²ரயோ மர்த்யோ
வாஸுதே³வ பராயண:|
ஸர்வ பாப விஸு² த்³தா⁴த்மா
யாதி ப்³ரஹ்ம ஸநாதநம்‌||

  • வாஸுதே³வ - வாஸுதேவரைச் 
  • ஆஸ்²ரயோ - சரணமாகக் கொண்டவன்
  • மர்த்யோ - மனிதன்
  • வாஸுதே³வ - வாஸுதேவரையே 
  • பராயணஸ் - உயர்ந்த இலக்காகக் கொண்டவன்
  • ஸர்வ - எல்லா
  • பாப - பாவங்களிலிருந்து
  • விஸு² த்³த⁴ ஆத்மா - தூய்மையான ஆத்மாவை உடையவனாகி
  • யாதி - அடைகிறான், செல்கிறான்
  • ப்³ரஹ்ம - பரம்பொருளை
  • ஸநாதநம் - என்றும் நிலைத்திருப்பதை

வாஸுதேவரைச் சரணமாகக் கொண்டு, அவரையே உயர்ந்த இலக்காகக் கொண்ட மனிதன், எல்லாப் பாவங்களிலிருந்தும் தூய்மை பெற்று, என்றும் நிலைத்திருக்கும் பரம்பொருளை அடைகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment