About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

108 திவ்ய தேசங்கள் - 038 - திருவெள்ளக் குளம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||038. திருவெள்ளக் குளம்||
||அண்ணன் கோயில் - திருநாங்கூர்||
||முப்பத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1308 - பெரிய திருமொழி - 4.7.1
கண் ஆர் கடல் போல்* திருமேனி கரியாய்*
நண்ணார் முனை* வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
திண் ஆர் மதிள் சூழ்* திருவெள்ளக் குளத்துள் அண்ணா* 
அடியேன் இடரைக் களையாயே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1309 - பெரிய திருமொழி - 4.7.2
கொந்து ஆர் துளவ* மலர் கொண்டு அணிவானே*
நந்தாத பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்*
செந்தாமரை நீர்த்* திருவெள்ளக் குளத்துள் எந்தாய்* 
அடியேன் இடரைக் களையாயே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1310 - பெரிய திருமொழி - 4.7.3
குன்றால் குளிர் மாரி* தடுத்து உகந்தானே*
நன்று ஆய பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்*
சென்றார் வணங்கும்* திருவெள்ளக் குளத்துள் நின்றாய்* 
நெடியாய் அடியேன் இடர் நீக்கே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1311 - பெரிய திருமொழி - 4.7.4
கான் ஆர் கரிக் கொம்பு* அது ஒசித்த களிறே*
நானா வகை* நல்லவர் மன்னிய நாங்கூர்*
தேன் ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக் குளத்துள் ஆனாய்* 
அடியேனுக்கு அருள்புரியாயே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1312 - பெரிய திருமொழி - 4.7.5
வேடு ஆர்* திருவேங்கடம் மேய விளக்கே*
நாடு ஆர் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்*
சேடு ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக் குளத்தாய்*
பாடா வருவேன்* வினை ஆயின பாற்றே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1313 - பெரிய திருமொழி - 4.7.6
கல்லால் கடலை* அணை கட்டி உகந்தாய்*
நல்லார் பலர்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வா* திருவெள்ளக் குளத்து உறைவானே*
எல்லா இடரும்* கெடுமாறு அருளாயே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1314 - பெரிய திருமொழி - 4.7.7
கோலால் நிரை மேய்த்த* எம் கோவலர் கோவே*
நால் ஆகிய* வேதியர் மன்னிய நாங்கூர்*
சேல் ஆர் வயல் சூழ்* திருவெள்ளக் குளத்துள் மாலே* 
என வல் வினை தீர்த்தருளாயே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1315 - பெரிய திருமொழி - 4.7.8
வாராகம் அது ஆகி* இம் மண்ணை இடந்தாய்*
நாராயணனே!* நல்ல வேதியர் நாங்கூர்*
சீர் ஆர் பொழில் சூழ்* திருவெள்ளக் குளத்துள்*
ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1316 - பெரிய திருமொழி - 4.7.9
பூ ஆர் திரு மா மகள்* புல்கிய மார்பா*
நா ஆர் புகழ்* வேதியர் மன்னிய நாங்கூர்*
தேவா* திருவெள்ளக் குளத்து உறைவானே*
ஆ ஆ அடியான்* இவன் என்று அருளாயே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1317 - பெரிய திருமொழி - 4.7.10
நல் அன்பு உடை* வேதியர் மன்னிய நாங்கூர்*
செல்வன்* திருவெள்ளக் குளத்து உறைவானை*
கல்லின் மலி தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லர் என வல்லவர்* வானவர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment