||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத:
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம்
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் 1.5.19
ந வை ஜநோ ஜாது கத²ஞ்சநா வ்ரஜேந்
முகுந்த³ ஸேவ்யந் யவத³ங்க³ ஸம்ஸ்ருதிம்|
ஸ்மரந் முகுந்தா³ங்க்⁴ரி உபகூ³ஹநம் புநர்
விஹாது மிச்சே²ந் நர ஸக்³ரஹோ யத:||
- அங்க³ - ஹே மகரிஷே!
- முகுந்த³ ஸேவீ ஜநோ - வாஸுதேவனை பஜிக்கும் மனிதன்
- அந் யவத்³ - கேவல கர்மடனைப் போல்
- ஜாது கத²ஞ்சநா - ஓர் சமயமும் எவ்விதமும்
- ஸம்ஸ்ருதிம் - பிறப்பை
- ந ஆவ்ரஜேத் - அடைவதில்லை
- வை - நிச்சயம்
- முகுந்தா³ங்க்⁴ரி உப கூ³ஹநம் - வாஸுதேவனது பாதங்களின் அரவணைப்பை
- புநர் ஸ்மரந் - எப்பொழுதும் நினைத்தவனாய்
- விஹாதும் ந இச்சே²த் - விட விரும்புவதில்லை
- யதஹ ரஸக்³ரஹோ - ஏனென்றால் இவன் ரசிக்க தகுந்தவரான முகுந்தனால் வசீகரிக்கப்படுகிறான்
மகரிஷியே! மிகுந்த பக்தி செய்பவன், வெறும் செயலாற்றுபவன் போல் தாழ்ந்த இவ்வுலகியலில் தளையுறான். பகவானது பாத கமலங்களின் அரவணைப் பின் ஸுகத்தை நினைந்து, நினைந்து, அதைக் கை விடான். ஏனெனில், அவன் அதன் இன்பத்தை உணர்ந்தவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment