||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த
ஸ்ரீ முகுந்த மாலா – 5
நாஸ்தா² த⁴ர்மே ந வஸு நிசயே
நைவ காமோப போ⁴கே³
யத்³ யத்³ ப⁴வ்யம் ப⁴வது ப⁴க³வந்
பூர்வ கர்மாணு ரூபம்|
ஏதத் ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம்
ஜன்ம ஜன்மாந்த ரேபி
த்வத் பாதா³ம் போ⁴ருஹ யுக³
க³தா நிஸ்²சலா ப⁴க்திரஸ்து||
பகவானே! எனக்கு இந்த உலக தர்மங்களின் மீது எவ்விதமான பற்றும் இல்லை! ஏராளமான செல்வக் குவியல்களின் மீதோ அல்லது சிற்றின்பத்தின் மீதோ எனக்கு நாட்டம் இல்லை! என் முந்தைய ஜென்மங்களின் கர்ம வினைப்படியே, எது எது எப்படி நடக்க வேண்டுமோ, அப்படியே நடக்கட்டும்! நான் உன்னிடம் வைக்கும் விருப்பமான கோரிக்கை என்னவென்றால், என்னுடைய எல்லா ஜன்மங்களிலும், உன் திருப் பாத கமலங்களில் மட்டும் ஸ்திரமான பக்தியினை தந்தருள வேண்டும் என்பதே!
தர்ம, அர்த்த, காமங்களில் உள்ள பற்றுகளை நீக்கி, பகவானுடைய ஸ்ரீ பாத கமலங்களால் மட்டுமே நம் மனமானது ஈர்க்கப்பட வேண்டும். இதற்கு தேவை சரணாகதி ஒன்றே! உலக போகங்களிலும், சிற்றின்பத்திலும் கிடைக்கும் சுகம் அநித்தியமானது. நித்தியமானவனாய், ஞான ஸ்வரூபனாய், ஆனந்த மயனுமாய் விளங்குகின்ற, குறையொன்றும் இல்லாத கோவிந்தனையே நாம் பாடிப் பரவ வேண்டும் என்பதையே குலசேகரர் இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment