||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான ஸ்லோகம் - 9
யம் ப்³ரம்ஹா வருணேந்த்³ர ருத்³ர மருதஸ்,
ஸ்துன் வந்தி தி³வ்யைஸ் ஸ்தவைஹி
வேதை³ஸ் ஸாங்க³ பத³ க்ரமோப நிஷதை³ர்,
கா³யந்தி யம் ஸாம கா³ஹ|
த்⁴யானா வஸ்தி² ததத்³ க³தேன மனஸா,
பஷ்யந்தி யம் யோகி³ னஹ
யஸ் யாந்தம் ந விது³ஸ் ஸுரா ஸுர க³ணாஹ,
தே³வாய தஸ்மை நமஹ||
- யம் - எவரை
- ப்³ரம்ஹா - பிரம்மன்
- வருண இந்த்³ர ருத்³ர மருதஸ் - வருணன், இந்திரன், ருத்ரன் (சிவன்), மற்றும் மருத்துகள், தேவதைகள்
- ஸ்துன்வந்தி - துதிக்கிறார்களோ
- தி³வ்யைஸ் ஸ்தவைஹி - தெய்வீகமான துதிகளால்
- வேதை³ஸ் - வேதங்களாலும்
- ஸ அங்க³ - வேதங்களின் ஆறு அங்கங்களோடும்
- பத³ க்ரம உபநிஷதை³ர் - பத பாடம், க்ரம பாடம் மற்றும் உபநிஷத்துகளுடனும்
- கா³யந்தி - பாடுகிறார்களோ
- யம் - எவரை
- ஸாம கா³ஹ - சாம வேதம் பாடுபவர்கள்
- த்⁴யான அவஸ்தி²த - தியான நிலையில் நிலைபெற்ற
- தத் க³தேன - அவரிடத்தில் (இறைவனிடத்தில்) லயித்த
- மனஸா - மனதால்
- பஷ்யந்தி - காண்கிறார்களோ
- யம் - எவரை
- யோகி³னஹ - யோகிகள்
- யஸ்ய அந்தம் - எவருடைய எல்லையை, முடிவை
- ந விது³ஸ் - அறிய மாட்டார்களோ
- ஸுர அஸுர க³ணாஹ - தேவர்களும் அசுரர்களும் ஆகிய கூட்டத்தினர்
- தே³வாய தஸ்மை - அந்த சுய பிரகாசமிக்க இறைவனுக்கு
- நமஹ - நமஸ்காரம், வணக்கம்
பிரம்மன், வருணன், இந்திரன், சிவன் மற்றும் தேவதைகள் எவரை தெய்வீகத் துதிகளால் போற்றுகிறார்களோ; சாம வேத கானம் பாடுபவர்கள் எவரை வேதாங்கங்கள், பதமுறை, கிரமமுறை மற்றும் உபநிஷத்துகளுடன் கூடி வேதங்கள் வாயிலாகப் பாடுகிறார்களோ; யோகிகள் தியானத்தில் நிலைத்து நின்று, எவரைத் தங்கள் ஒருமுகப்பட்ட மனதால் தரிசிக்கிறார்களோ; தேவர்களாலும் அசுரக் கூட்டங்களாலும் எவருடைய ஆதியும் அந்தமும் ஆகிய எல்லையை அறிய முடியவில்லையோ; அந்தப் பரம்பொருளாகிய பகவானுக்கு என் நமஸ்காரம்.
கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை:
ஸாஸ்த்ர ஸங்க் ரஹைஹி|
யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய,
முகபத் மாத் விநி:ஸ்ருதா||
- கீதா - பகவத் கீதை
- ஸுகீதா - நன்றாகப் பாடப்பட, படிக்கப்பட
- கர்தவ்யா - வேண்டியது கடமையாகும்
- கிம் - என்ன பயன்?
- அந்யையை - மற்ற பிற
- ஸாஸ்த்ர ஸங்க்ரஹைஹி = சாஸ்திரங்களின் தொகுப்புகளால், விரிவான நூல்களால்
- யா - எது, எந்த ஒரு கீதை
- ஸ்வயம் - நேரடியாக, தானாகவே
- பத்ம நாபஸ்ய - தாமரையைத் தொப்புளில் உடைய மகாவிஷ்ணுவின்
- முக பத்மாத் - தாமரை போன்ற திருமுகத்திலிருந்து
- விநிஸ் ஸ்ருதா -வெளி வந்ததோ
மகாவிஷ்ணுவின் (ஸ்ரீ கிருஷ்ணரின்) தாமரை போன்ற திருமுகத்திலிருந்து நேரடியாக வெளி வந்த பகவத் கீதையை மட்டும் நன்றாகவும் முறையாகவும் படித்தால் போதுமானது. அவ்வாறு இருக்கும் போது, மற்ற விரிவான சாஸ்திரங்களின் தொகுப்புகளைப் படிப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது? (அதாவது, கீதை ஒன்றே அனைத்து சாஸ்திரங்களின் சாரமாகும்)
ஸ்ரீ கீ³தா பூர்ண ஸ்லோகம்
பூர்ண மதஹ் பூர்ண மிதம்,
பூர்ணாத் பூர்ண முதச்யதே,
பூர்ணஸ்ய பூர்ண மாதாய,
பூர்ண மேவ அவ சிஷ்யதே,
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!
- பூர்ணம் - முழுமையானது, எல்லையற்றது (பிரம்மம்)
- அதா - அது கண்ணுக்குப் புலப்படாத பரமாத்மா உலகம்
- பூர்ணம் - முழுமையானது
- இதம் - இது கண்ணுக்குப் புலப்படும் ஜீவாத்மா, பிரபஞ்ச உலகம்
- பூர்ணாத் - அந்த முழுமையிலிருந்து
- பூர்ணம் - இந்த முழுமையான பிரபஞ்சம்
- உதச்யதே - வெளிப்படுகிறது, தோன்றுகிறது
- பூர்ணஸ்ய -அந்த முழுமையின், இறைவனின்
- பூர்ணம் - முழுமையை
- ஆதாய - எடுத்த பிறகும், நீக்கிய பின்பும்
- பூர்ணம் ஏவ - முழுமை மட்டுமே
- அவசிஷ்யதே - எஞ்சியிருக்கிறது
- ஓம் - பிரணவ மந்திரம்
- சாந்தி - அமைதி (உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் அமைதி நிலவட்டும்)
அந்தப் பரம்பொருளும் முழுமையானது; அவரிடமிருந்து தோன்றிய இந்த பிரபஞ்சமும் முழுமையானது. முழுமையிலிருந்து முழுமை தோன்றினாலும், அந்த மூல முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பிறகும், அது எக்காலத்திலும் குறையாமல் முழுமையாகவே எஞ்சியிருக்கும். (இதனை ஆன்மீகக் கணிதம் என்று கூறுவர்: முழுமை - முழுமை = முழுமை)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment