||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான ஸ்லோகம் - 7
- பாரா ஸர்ய – பராசர முனிவரின் குமாரனாகிய வேத வியாசரின்
- வசஸ் – வார்த்தைகளிலிருந்து தோன்றிய
- ஸரோஜம் – தாமரை மலரே!
- அமலம் – அழுக்கற்ற, பரிசுத்தமான
- கீ³தார்த² – பகவத் கீதையின் தத்துவங்களாகிய
- க³ந்த⁴ – நறுமணம்
- உத்கடம் – மிகுதியாகக் கொண்ட, நிறைந்த
- நானா – பலவிதமான
- ஆக்²யானக – துணைக் கதைகள், வரலாற்றுச் சம்பவங்கள் என்னும்
- கேஸரம் – மகரந்தக் கேசரங்களை உடைய
- ஹரி கதா² – ஸ்ரீஹரியின் (மகாவிஷ்ணுவின்) திவ்ய சரித்திரங்களை
- ஸம்போ³த⁴ன – உபதேசிப்பதன் மூலம்
- போ³தி⁴ தம் – மலரச் செய்யப்பட்டது
- லோகே – இந்த உலகத்தில்
- ஸஜ்ஜன – நல்லோர்கள், சாதுக்கள் என்னும்
- ஷட்பதை³ – ஆறு கால்களை உடைய வண்டுகளால்
- அஹரஹஹ – நாள்தோறும், தினமும்
- பேபீய மானம் – மீண்டும் மீண்டும் ஆவலோடு பருகப்படும்
- முதா³ – மகிழ்ச்சியுடன்
- பூ⁴யாத்³ – உண்டாகட்டும், அருளட்டும்
- பா⁴ரத பங்கஜம்– மகாபாரதம் என்னும் தாமரை மலர்
- கலி மல– கலியுகத்தின் பாவங்களை, தோஷங்களை
- பா⁴ரத வம்ஸி– வேரோடு அழிப்பது
- நஸ் - நம் அனைவருக்கும்
- ஸ்ரேயஸே – நன்மையை, மங்களத்தை
இந்த ஸ்லோகம் மொத்த மகாபாரதத்தையும் ஒரு அழகான தாமரை மலருக்கு உருவகப்படுத்துகிறது.
தடாகம் (குளம்): வேத வியாசரின் திருவாக்கு
மலர்: மகாபாரதம்
மணம்: பகவத் கீதையின் போதனைகள்
மகரந்தம் (இதழ்கள்): அதில் வரும் உபகதைகள் (நளவெண்பா, சாவித்திரி கதை போன்றவை)
சூரியன் (மலர வைப்பது): நாராயணனின் கதைகள்
வண்டுகள்: நல்ல நூல்களைத் தேடிப் படிக்கும் சாதுக்கள்
கலியுகத்தின் பாவங்களைப் போக்கும் மகாபாரதம் என்னும் தாமரை மலர், நம் அனைவருக்கும் மங்களத்தையும் நன்மையையும் அளிக்கட்டும். இந்த தாமரை மலர், பராசரரின் குமாரனான வேத வியாசரின் சொற்கள் என்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி (பகவத் கீதை) என்னும் நறுமணம் வீசுகிறது. பல வரலாற்று கதைகளாகிய இதழ்களைக் கொண்டது; ஸ்ரீ ஹரியின் கதை என்ற சூரியனால் மலரச் செய்யப்பட்டது; இந்த தாமரையின் தேன் நல்லோர்களாகிய வண்டுகளால் தினமும் மகிழ்ச்சியுடன் பருகப்படுவது ஆகும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment