||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான ஸ்லோகம் - 5
வஸுதே³ வஸுதம் தே³வம்,
கம்ஸ சாணூர மர்த³னம்|
தே³வகீ பரமானந்த³ம்,
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||
- வஸுதே³வ ஸுதம் - வசுதேவரின் குமாரனான
- தே³வம் - திவ்ய பிரகாசம் பொருந்திய இறைவனை
- கம்ஸ - கம்சனையும்
- சாணூர: சாணூரன் என்ற அரக்கனையும்
- மர்த³னம் - வதம் செய்தவனை, அழித்தவனை
- தே³வகீ - தேவகி தேவிக்கு
- பரமானந்த³ம் - அளவற்ற மட்டற்ற மகிழ்ச்சியைத் தருபவனை
- க்ருஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
- வந்தே³ - நான் வணங்குகிறேன்
- ஜக³த்³ கு³ரும் - அகில உலகத்திற்கும் குருவானவனை
வசுதேவரின் புத்திரனும், கம்சன் மற்றும் சாணூரனை அழித்தவனும், தேவகி தேவிக்கு பேரானந்தத்தை அளிப்பவனுமாகிய அகில உலகத்திற்கும் குருவான திவ்ய பிரகாசம் பொருந்திய இறைவனை, ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment