About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

ஸ்ரீரங்கம் கோவில் பெரிய என்ற சொற்களால் 
வரும் பெருமை உடையது 

  • 1. பெரிய கோவில் 
  • 2. பெரிய பெருமாள்
  • 3. பெரிய பிராட்டியார் 
  • 4. பெரிய கருடன் 
  • 5. பெரிய வசரம் 
  • 6. பெரிய திருமதில் 
  • 7. பெரிய கோபுரம் 

 ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் 

  • 1. ஸ்ரீதேவி 
  • 2. பூதேவி 
  • 3. துலுக்க நாச்சியார் 
  • 4. சேரகுலவல்லி நாச்சியார் 
  • 5. கமலவல்லி நாச்சியார் 
  • 6. கோதை நாச்சியார் 
  • 7. ரெங்கநாச்சியார்

ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் 
தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். 

  • 1. விருப்பன் திருநாள் 
  • 2. வசந்த உத்சவம் 
  • 3. விஜயதசமி 
  • 4. வேடுபறி 
  • 5. பூபதி திருநாள் 
  • 6. பாரிவேட்டை 
  • 7. ஆதி பிரம்மோத்சவம்

ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் 
திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். 

  • 1. சித்திரை 
  • 2. வைகாசி 
  • 3. ஆடி 
  • 4. புரட்டாசி 
  • 5. தை 
  • 6. மாசி 
  • 7. பங்குனி

ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று 
வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். 

  • 1. சித்திரை
  • 2. வைகாசி 
  • 3. ஆவணி 
  • 4. ஐப்பசி 
  • 5. தை 
  • 6. மாசி 
  • 7. பங்குனி

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு 
ஏழு உற்சவங்கள் நடைபெறும். 

  • 1. கோடை உத்சவம் 
  • 2. வசந்த உத்சவம் 
  • 3. ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை 
  • 4. நவராத்ரி 
  • 5. ஊஞ்சல் உத்சவம் 
  • 6. அத்யயநோத்சவம் 
  • 7. பங்குனி உத்திரம்

ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர 
மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.

  • 1. வசந்த உத்சவம் 
  • 2. சங்கராந்தி 
  • 3. பாரிவேட்டை 
  • 4. அத்யயநோத்சவம் 
  • 5. பவித்ர உத்சவம் 
  • 6. உஞ்சல் உத்சவம் 
  • 7. கோடை உத்சவம்

ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே 
கண்டுகளிக்கும் சேவைகளாகும். 

  • 1. பூச்சாண்டி சேவை 
  • 2. கற்பூர படியேற்ற சேவை 
  • 3. மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை 
  • 4. வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் 
  • 5. உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை 
  • 6. தாயார் திருவடி சேவை 
  • 7. ஜாலி சாலி அலங்காரம்

பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான 
தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. 

  • 1. நாழிகேட்டான் கோபுரம் 
  • 2. ஆர்யபடால் கோபுரம் 
  • 3. கார்த்திகை கோபுரம் 
  • 4. ரெங்கா ரெங்கா கோபுரம் 
  • 5. தெற்கு கட்டை கோபுரம்- 
  • 6. தெற்கு கட்டை கோபுரம் 
  • 7. ராஜகோபுரம்

பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் 
எழுந்தருளி இருக்கிறார்கள். 

  • 1. பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் 
  • 2. நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் 
  • 3. குலசேகர ஆழ்வார் 
  • 4. திருப்பாணாழ்வார் 
  • 5. தொண்டரடிபொடி ஆழ்வார் 
  • 6. திருமழிசை ஆழ்வார் 
  • 7. பெரியாழ்வார், ஆண்டாள்

ஏழு திருச்சுற்றுகள், ஏழு மதில் சுற்றுக்களையும் 
ஏழு உலகங்கள் என்று கூறுவர்.

  • 1. மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று: பூலோகம்
  • 2. திரிவிக்ரம சோழன் சுற்று: புவர் லோகம்
  • 3. அகளங்கன் என்னும் கிளிச் சோழன் சுற்று: ஸுவர் லோகம்
  • 4. திருமங்கை மன்னன் சுற்று: மஹர் லோகம்
  • 5. குலசேகரன் சுற்று: ஜநோ லோகம்
  • 6. ராஜ மஹேந்திர சோழன் சுற்று: தபோ லோகம்
  • 7. தர்ம வர்ம சோழன் சுற்று: ஸத்ய லோகம்

மற்ற விவரங்கள் 

  • ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
  • தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
  • ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.
  • இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.
  • பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் மருந்துக்கலவை. அபிஷேகம் செய்யப்படுகிறது.
  • கார்த்திகை கைசிக ஏகாதசியன்று வளர்பிறை ஏகாதசி. இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment