About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பொது தனியன் 5

ஆழ்வார்கள் உடையவர் தனியன்
(ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது)

பூ⁴தம் ஸரஸ்²ச மஹதா³ஹ்வய ப⁴ட்ட நாத²*
ஸ்ரீ ப⁴க்தி ஸார குலஸே²க²ர யோகி³ வாஹாந்*
பக்⁴தாங்க்⁴ரி ரேணு பரகால யதீந்த்³ர மிஸ்²ராந்*
ஸ்ரீ மத் பராங்குஸ² முநிம் ப்ரதோஸ்மி நித்யம்||

  • பூ⁴தம் - பூதத்தாழ்வார்
  • ஸரஸ்²ச - பொற்றாமரைப் பூவில் அவதரித்த பொய்கையார் (ஸரஸ் என்றால் பொய்கை, குளம்)
  • மஹதா³ஹ்வய - செவ்வல்லிப் பூவிலே அவதரித்த பேயாழ்வார் (மஹத் என்னும் பெயருடையவர்)
  • ப⁴ட்ட நாத² - வித்துவக் கோஷ்டியிலே சென்று அவர்களை வென்று பரத்வ நிர்ணய முகேன பட்டர் பிரான் பெரியாழ்வார், விஷ்ணுசித்தர் 
  • ஸ்ரீ ப⁴க்தி ஸார - திருமழிசை ஆழ்வார்
  • குலஸே²க²ர - பெரிய பெருமாள் விஷயத்தில் நிரவதிக பிரேமத்தையுடைய குலசேகர ஆழ்வார்
  • யோகி³ வாஹாந் - யோகி வாஹர் ஆகிறார் முனி வாஹரான பாண் பெருமாள் திருப்பாணாழ்வார் (முனி வாஹனர்)
  • பக்⁴தாங்க்⁴ரி ரேணு - தொண்டரடிப்பொடி ஆழ்வார் (பக்தர்களின் அடிப் பொடி)
  • பரகால - வாள் வீசும் பரகாலன் திருமங்கையாழ்வார்
  • யதீந்த்³ர - மதுரகவி யாழ்வார் எதிராசராம் இவர்கள் சேர்த்தி இருப்பது. உடையவர், ஸ்ரீ ராமானுஜர் (துறவிகளின் வேந்தர்)
  • மிஸ்²ராந் - மற்றும் முதலானோரை (இவர்கள் அனைவரையும்)
  • ஸ்ரீமத் - கல்யாண குணங்கள் நிறைந்த
  • பராங்குஸ² முநிம் - எல்லாரையும் அவயவ பூதராய் உடையரான நம்மாழ்வாரை, பராங்குச முனியை 
  • ப்ரதோஸ்மி - வணங்குகிறேன், நமஸ்கரிக்கிறேன்
  • நித்யம் - நாள்தோறும், எப்போதும்

நம்மாழ்வாரே முழு பகவத் ஸ்வரூபம், மற்ற ஆழ்வார்கள் அவருக்கு அவயங்கள். பூதத்தாழ்வாரே திருமுடி, பொய்கையாழ்வார், பேயாழ்வார் இரு கண்கள், முகமே பெரியாழ்வார், கழுத்து திருமழிசையாழ்வார், இரு கைகளோ குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் தான் திருமார்பு, திருமங்கையாழ்வார் நாபி, யதிராஜரே நம்மாழ்வாரின் திருவடி. ஆழ்வார்களையும், எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் உள்ளிட்ட ஆச்சாரியர்களையும் நான் தினமும் தலை வணங்கி போற்றுகிறேன். 
 
இத்தனியன் ஸ்ரீ நஞ்ஜீயரின் தூண்டுதலின் பேரில் ஸ்ரீ பராசர பட்டரால் அருளிச் செய்யப்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment