||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான ஸ்லோகம் - 2
நமோ அஸ்து தே வ்யாஸ விஸால பு³த்³தே⁴
பு²ல்லார விந்தா³ யத பத்ர னேத்ர|
யேன த்வயா பா⁴ரத தைல பூர்ண꞉
ப்ரஜ் வாலிதோ ஜ்ஞான மய꞉ ப்ரதீ³ப꞉||
- நமோ – வணக்கம், நமஸ்காரம்
- அஸ்து – உண்டாகட்டும், உரித்தாகட்டும்
- தே – உமக்கு
- வ்யாஸ – வியாச முனிவரே
- விஸால பு³த்³தே⁴ – பரந்த விசாலமான அறிவைக் கொண்டவரே
- பு²ல்ல – மலர்ந்த
- அரவிந்தா³ – தாமரை மலரின்
- ஆயத – நீண்ட
- பத்ர – இதழ்கள் போன்ற
- னேத்ர – கண்களை உடையவரே
- யேன – எவரொருவரால்
- த்வயா – உம்மால்
- பா⁴ரத – மகாபாரதம் என்கிற
- தைல – எண்ணெயால்
- பூர்ணஹ் – நிரப்பப்பட்ட
- ப்ரஜ் வாலிதோ – ஏற்றி வைக்கப்பட்டு, பிரகாசிக்கச் செய்யப்பட்ட
- ஜ்ஞான மயஹ் – அறிவு, ஞான வடிவிலான
- ப்ரதீ³பஹ் – விளக்கு
அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக் கண்களை உடைய வ்யாச குருவே, உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளி வீசுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment