||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
||பூர்வ பாகம் (முற்பகுதி) பாகம் 2||
ஓம் நமோ விஷ்ணவே ப்ரப⁴ விஷ்ணவே||
ஸ்ரீ வைஸ²ம் பாயந உவாச|
ஸ்²ருத்வா த⁴ர்மா ந ஸே²ஷேண
பாவநாநி ச ஸர்வஸ:|
யுதி⁴ஷ்டிர: ஸா²ந்த நவம்
புநரே வாப்⁴ய பா⁴ஷத||
- ஓம் - பிரணவ மந்திரம், பரம்பொருளைக் குறிக்கும் புனித ஒலி
- நமோ - வணக்கம், சரணடைதல்
- விஷ்ணவே - விஷ்ணுவுக்கு
- ப்ரப⁴ - பிரபுவே, தலைவனே
- விஷ்ணவே - விஷ்ணுவுக்கு
- ஸ்ரீ - சிறப்புடைய, மங்களமான
- வைஸ²ம் பாயந - வைஷம் பாயனர் என்ற முனிவர்
- உவாச - கூறினார், உரைத்தார்
- ஸ்²ருத்வா - கேட்ட பிறகு
- த⁴ர்மாந் - தர்மங்களை, அறநெறிகளை
- அஸே²ஷேண - முழுமையாக, எஞ்சியில்லாமல்
- பாவநாநி - புனிதமானவை, தூய்மைப்படுத்துபவை
- ச - மேலும், மற்றும்
- ஸர்வஸஹ - எல்லா வகையிலும், முழுமையாக
- யுதி⁴ஷ்டிரஸ் - யுதிஷ்டிரர்
- ஸா²ந்த நவம் - சாந்தனுவின் மகனான பீஷ்மரை
- புநர் - மீண்டும்
- ஏவ - அதுவே, நிச்சயமாக
- அபி⁴ - மேலும், மீண்டும்
- பா⁴ஷத - பேசினார், கேட்டார்
வியாஸரின் மாணாக்கர் வைஸம் பாயனர். ஜனமே ஜயன் என்னும் மன்னனுக்குப் பாரதத்தை உபதேசித்தவர். ஜனமே ஜயன் என்னும் மன்னவன் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பெருமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் அவாவினால், வைஸம் பாயனர் ஜனமே ஜயனுக்கு இதனை உபதேசித்தார்.
ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்துக்குப் பீடிகையாகத் தொடங்குகிறது இந்த வரி. ஸ்ரீவைஸம் பாயனர் ஜனமே ஜயனிடம் கூறியது. இப்படித் தொடங்குகிறது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம உபதேசம். எல்லாத் தருமங்களையும், பாவங்கள் அனைத்தையும் போக்கும் முறைகளையும் பீஷ்மர் தருமருக்குக் கூறி வந்தார். இவை அனைத்தையும் ஒன்று விடாமல் தருமர் பீஷ்மரிடம் கேட்டறிந்தார். மேலும் பீஷ்மரை நோக்கித் தருமர் மீண்டும் கேட்கலானார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment