||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
||வியாஸர் வணக்கம்||
வ்யாஸாய விஷ்ணு ரூபாய:
வ்யாஸ ரூபாய விஷ்ணுவே|
நமோ வை ப்³ரஹ்ம நித⁴யே
வாஸிஷ்டா²ய நமோ நம:||
- வ்யாஸாய - வியாசருக்கு, வியாச முனிவருக்கு
- விஷ்ணு - விஷ்ணுவாகிய
- ரூபாயஹ் - வடிவம் கொண்டவருக்கு
- வ்யாஸ - வியாசரின்
- ரூபாய - வடிவமாக இருப்பவருக்கு
- விஷ்ணுவே - விஷ்ணுவே
- நமோ - வணக்கம், நமஸ்காரம்
- வை - நிச்சயமாக, உண்மையாக
- ப்³ரஹ்ம - பரம்பொருள், பிரம்மம்
- நித⁴யே - களஞ்சியமாக இருப்பவருக்கு, இருப்பிடமாக இருப்பவருக்கு
- வாஸிஷ்டா²ய - வசிஷ்ட முனிவரின் வழிவந்தவருக்கு
- நமோ - வணக்கம்
- நமஹ - மீண்டும் வணக்கம்
விஷ்ணு வடிவமாக உள்ள வியாஸராகவும், வியாஸர் வடிவமாக உள்ள விஷ்ணுவாகவும், வேதக் களஞ்சியமாகவும் உள்ள வஸிஷ்டர் குலத் தோன்றலாகிய வியாஸ பகவானை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment