||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பொது தனியன் 1
ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன்
(அழகிய மணவாளன் அருளிச் செய்தது)
ஸ்ரீ ஸை²லேஸ² த³யாபாத்ரம்*
தீ⁴ப⁴க்த்யாதி³ கு³ணார்ணவம்*
யதீந்த்³ர ப்ரவணம் வந்தே³*
ரம்ய ஜாமாதரம் முநிம்||
- ஸ்ரீ ஸை²லேஸ² - ஸ்ரீ சைலேசர் என்ற திருவாய்மொழிப் பிள்ளை என்று அழைக்கப்படும் ஆசாரியரின் எல்லையற்ற
- த³யா பாத்ரம் - கருணைக்கு இருப்பிடமானவரை / அருள் பாத்திரமாய் விளங்குபவரை
- தீ⁴ - சிறந்த ஞானம் (அறிவு)
- ப⁴க்தி - இறைவனிடம் கொண்ட பக்தி.
- ஆதி³ - முதலிய
- கு³ணார்ணவம் - நற்குணங்களின் கடலாக விளங்குபவரை
- யதீந்த்³ர - யதிகளின், துறவிகளின் தலைவரான ஸ்ரீ ராமானுஜரிடம்
- ப்ரவணம் - மிகுந்த ஈடுபாடு, பக்தி கொண்டவரை
- வந்தே³ - நான் வணங்குகிறேன், நமஸ்கரிக்கிறேன்
- ரம்ய ஜாமாதரம் - அழகிய மணவாளன் என்னும் திருநாமம் கொண்ட
- முநிம் - முனிவரை, மணவாள மாமுனிகளை
ஸ்ரீ சைலேசர் என்ற திருவாய்மொழிப்பிள்ளை, ஆசார்யரின் எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும், பக்தி, ஞானம், வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்று இருப்பவரும், யதிராஜரான ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்.
தனியனைப் பாடியவர்: ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த, சாட்சாத் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளே.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment