||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
||வியாஸர் வணக்கம்||
வ்யாஸம் வஸிஷ்ட² நப்தாரம்
ஸ²க்தே: பௌத்ரம் அகல் மஷம்|
பராஸ²ராத் மஜம் வந்தே³
ஸு²க தாதம் தபோ நிதி⁴ம்||
- வ்யாஸம் - வியாசரை
- வஸிஷ்ட² - வசிஷ்டருடைய
- நப்தாரம் - பேரனாகியவரை
- ஸ²க்தேஃ - சக்தி முனிவருடைய
- பௌத்ரம் - பேரனாகியவரை
- அகல் மஷம் - களங்கமற்றவரை
- பராஸ²ராத் - பராசர முனிவருடைய
- மஜம் - மகனாகியவரை
- வந்தே³ - வணங்குகிறேன்
- ஸு²க - சுகதேவருடைய
- தாதம் - தந்தையாகியவரை
- தபோ நிதி⁴ம் - தவத்தின் திருவுருவாக இருப்பவரை, தவத்தின் செல்வமாக இருப்பவரை
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத் தொகுத்து அளித்தவர் வியாஸ பகவான். அவரை முதலில் வணங்குவோம்.
ஸ்ரீ இராமாயணத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர் வஸிஷ்டர். வஸிஷ்டரின் குமாரர் ஸக்தி. ஸக்தியின் குமாரர் பராஸரர். பராஸரரின் குமாரர் வியாஸர். வியாஸரின் குமாரர் ஸுகப் பிரம்மம். இவ்வாறு திருமாலின் தமராகப் பல தலைமுறைகளாக இருந்து வரும் நல்ல மரபில் குற்றமற்ற தவச் செல்வராக விளங்குபவர் வியாஸ பகவான். இத்தகைய பெருமைக்குரிய வியாஸ பகவானை முதலில் வணங்குவோம்.
(வசிஷ்டரின் பேரனும், சக்தி முனிவரின் பேரனும், பராசர முனிவரின் மகனும், சுகதேவரின் தந்தையும், தவத்தின் திருவுருவமாக விளங்குபவருமான வியாசரை நான் வணங்குகிறேன்.)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment