||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
1. ஸ்ரீ கைர விண்யா ஸுதீரே
பத்ம நேத்ரம் பவித்ரம் புராரேஸ் ஸுமித்ரம்|
சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம்
ருக்மிணீ ஸத்யபாமா ஸமாச்லிஷ்ட காத்ரம்||
- ஸ்ரீ – திரு, மங்களகரமான, லக்ஷ்மி தேவியுடன் கூடிய
- கைர – அல்லி மலர்கள் நிறைந்த
- விண்யா – காட்டின், குளத்தின் (கைர விண்யா என்பது அல்லிக்குளம் அல்லது திருவல்லிக்கேணி திருத்தலத்தைக் குறிக்கும்)
- ஸுதீரே – நல்ல கரையில், அழகான கரையில் எழுந்தருளியிருப்பவர்
- பத்ம – தாமரை போன்ற
- நேத்ரம் – கண்களை உடையவர்
- பவித்ரம் – தூய்மையானவர், பரிசுத்தமானவர்
- புராரேஸ் – முப்புரங்களை எரித்த சிவபெருமானுக்கு
- ஸுமித்ரம் – நல்ல நண்பராக விளங்குபவர்
- சந்த்ராப – நிலவின் ஒளியைப் போன்ற, சந்திரன் போன்ற ஒளி பொருந்திய
- வக்த்ரம் – முகத்தை உடையவர்
- ஸுதோத்ரம் – துதிப்பதற்கு இனியவர், நற்புகழ் கொண்டவர்
- ருக்மிணீ – ருக்மிணி தேவி
- ஸத்யபாமா – சத்யபாமா தேவி
- ஸமாச்லிஷ்ட – இரு புறமும் தழுவப்பட்ட, அணைக்கப்பட்ட
- காத்ரம் – திருமேனியை, உடலை உடையவர்
திருவல்லிக்கேணி கைர விணீ எனும் குளக்கரையில் எழுந்தருளி இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், தூய்மையானவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி ஸ்ரீ பரமேச்வரனின் நண்பர், சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணி மற்றும் சத்யபாமா ஆகிய இரு தேவியரால் இருபுறமும் தழுவப்பட்ட திருமேனியை உடையவருமான பரந்தாமனை, ஸ்ரீ பார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment