About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 19 August 2026

ஸ்ரீ தா⁴ன்ய லக்ஷ்மி ஸ்லோகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ தா⁴ன்ய லக்ஷ்மி

தானிய வளங்களை அருள்பவள் தான்யலக்ஷ்மி. தானிய வகைகள், உணவுப் பொருட்கள், பழம், கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்யலக்ஷ்மி. இவளுக்கு அன்னலக்ஷ்மி என்ற பெயரும் உண்டு. திருமாலைப் பச்சைமால் என்பர். அவர் நிறத்திற்குக் காரணம் தான்ய லக்ஷ்மியேயாகும். அவள் உலகப் பசுமைக்குத் தலைவி. ஆறு திருக்கரங்களைக் கொண்டவள். வலப்புறம் தானிய நெற்கதிர், அபய முத்திரை, அம்பு முதலியவற்றைக் கொண்டும், இடப்புறம் வில், கரும்பு, வரத முத்திரை முதலியவற்றைக் கொண்டும் விளங்குபவள். யானையைப் பீடமாகக் கொண்டவள். லக்ஷ்மி தந்திரம் என்னும் நூலில் தான்யலக்ஷ்மி சதாக்க்ஷி, சாகம்பரி எனப்போற்றப்படுகிறாள். உலகம் மழை நீர் இல்லாமல் வாடும் என்பதினால் நூறு கண்களால் நீர் வளத்தைப் பெருக்குகிறாள் என்ற பொருள் பட சதாக்ஷி எனவும், உணவுப் பொருட்களை உருவாக்குகிறாள் என்பதனால் சாகம்பரி எனவும் அழைக்கப்படுகிறாள்.

அயி கலி கல் மஷ நாஸி²னி காமினி
வைதி³க ரூபிணி வேத³ மயே
க்ஷீர ஸமுத்³ ப⁴வ மங்க³ள ரூபிணி
மந்த்ரனி வாஸினி மந்த்ர நுதே|
மங்க³ள தா³யினி அம்பு³ஜ வாஸினி
தே³வ க³ணாஸ்²ரித பாத³ யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
தா⁴ன்ய லக்ஷ்மி ஸதா³ பாலய மாம்|| 

  • அயி - அம்மா! 
  • கலி கல் மஷ நாஸி²னி - கலியுகத்தின் பாவங்களையும் குற்றங்களையும் அழிப்பவளே!
  • காமினி - பக்தர்களின் நல்விருப்பங்களை நிறைவேற்றுபவளே!, அழகானவளே!
  • வைதி³க ரூபிணி - வேத நெறிகளின் வடிவமாகத் திகழ்பவளே!
  • வேத³ மயே - வேதமே வடிவாக நிறைந்திருப்பவளே!
  • க்ஷீர ஸமுத்³ ப⁴வ - பாற்கடலில் இருந்து தோன்றியவளே!
  • மங்க³ள ரூபிணி - மங்களகரமான வடிவத்தைக் கொண்டவளே!
  • மந்த்ர நிவாஸினி - மந்திரங்களில் வாசம் செய்பவளே!
  • மந்த்ர நுதே - மந்திரங்களால் துதிக்கப்படுபவளே!
  • மங்க³ள தா³யினி - நன்மைகளையும் மங்களங்களையும் வழங்குபவளே!
  • அம்பு³ஜ வாஸினி - தாமரை மலரில் வீற்றிருப்பவளே!
  • தே³வ க³ண ஆஸ்²ரித - தேவர்களின் கூட்டங்களால் சரணடையப்பட்ட, வணங்கப்பட்ட
  • பாத³ யுதே - திருவடிகளை உடையவளே!
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • தா⁴ன்ய லக்ஷ்மி - தானியலட்சுமி தேவியே!
  • ஸதா³ - எப்போதும் 
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

கலியுகத்தின் பாவங்களை அழிப்பவளே, அழகியே, வேத உருவானவளே, வேத மயம் ஆனவளே, பாற்கடலில் தோன்றிய மங்கல வடிவே, மந்திரங்களில் வாழ்பவளே, மந்திரங்களினால் வழிபடப் பெறுகிறவளே, நலமனைத்தும் அளிப்பவளே, தாமரையில் வாசம் செய்பவளே, தேவர்கள் புகலாகக் கொண்ட திருவடிகள் வாய்த்தவளே, மதுசூதனின் மனைவியே, தான்யங்களில் உறைந்து உலக உயிர்களை நிலைபெறச் செய்பவளே, தான்ய லக்ஷ்மியே, எனக்கு எப்பொழுதும் வளமளித்து காப்பாற்றுவாயாக! எனக் கூறி ஸ்ரீ தான்ய லக்ஷ்மியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறையும். வாழ்வில் உணவுப் பஞ்சமே இருக்காது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment