||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அவதரிக்கை
நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டுவித செல்வங்களுக்கு அதிபதியாக, எட்டு தெய்வீக வடிவங்களில், அஷ்டலக்ஷ்மியாக வழிபடுவது நம் மரபாக இருக்கிறது. அந்த எட்டு லக்ஷ்மிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்:
தனம், தான்யம் என்ற அஷ்ட ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மகாலக்ஷ்மி அஷ்டலக்ஷ்மியாக விளங்குகிறாள். ஆதிலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, தைர்யலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஸந்தானலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தனலக்ஷ்மி என்று அஷ்டலக்ஷ்மிகள். அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வீற்றிருக்கும் திசைகள் வருமாறு:-
- கிழக்கில் - வித்யாலக்ஷ்மி
- தென்கிழக்கில் - தனலக்ஷ்மி
- தெற்கில் - ஸந்தானலக்ஷ்மி
- தென்மேற்கில் - தைர்யலக்ஷ்மி
- மேற்கில் - ஆதிலக்ஷ்மி
- வடமேற்கில் - கஜலக்ஷ்மி
- வடக்கில் - விஜயலக்ஷ்மி
- வடகிழக்கில் - தான்யலக்ஷ்மி
என்று அஷ்ட திக்குகளில் அஷ்ட லக்ஷ்மிகளாக வாசம் புரிகின்றாள்.
அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் என்பது ஆதி, தானிய, தைரிய, கஜ, சந்தான, வீர, விஜய, வித்யா ஆகிய எட்டு லக்ஷ்மி வடிவங்களையும் போற்றி, செல்வம், ஞானம், தைரியம், வளம் போன்றவற்றை அருளுமாறு வேண்டிக்கொள்ளும் ஒரு மந்திரமாகும். இந்த ஸ்தோத்திரத்தில், ஒவ்வொரு லக்ஷ்மியின் அம்சமும் அவற்றின் நன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment