||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 127 - இலங்கை மலக்கிய வில்லாளன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தரவு கொச்சகக் கலிப்பா
வல்லாள் இலங்கை மலங்கச்* சரந் துரந்த*
வில்லாளனை* விட்டுசித்தன் விரித்த*
சொல் ஆர்ந்த அப்பூச்சிப்* பாடல் இவை பத்தும்
வல்லார் போய்* வைகுந்தம் மன்னி இருப்பரே| (2)
- வல்லாள் - பலசாலிகளான வீரர்களை யுடைய
- இலங்கை - லங்கையானது
- மலங்க - பாழாம்படி
- சரம் துரந்த - அம்பைச் செலுத்திய
- வில் ஆளனை - வில்லையேந்தி ஸ்ரீராமனாக முன்பு திருவவதரித்த கண்ணனைப் பற்றி
- விட்டு சித்தன் - பெரியாழ்வார்
- விரித்த - பரக்க கூறிய
- சொல் ஆர்ந்த - சொல் நிரம்பிய
- அப் பூச்சி பாடல் இவை பத்தும் - அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும்
- வல்லார் - கற்க வல்லவர்
- போய் - அர்ச்சிராதிமார்க்கமாகப் போய்
- வைகுந்தம் - ஸ்ரீவைகுண்டத்திலே
- மன்னி இருப்பர் - நித்ய வாஸம் பண்ணப் பெறுவர்
முன்பு இராமனாய் அவதரித்து, வில்லேந்தி, வீரர்கள் நிரம்பிய இலங்கையை தன்னுடைய அம்புச் சரங்களால் வீழ்த்தியவன் இன்று கண்ணனாய் பிறந்து அப்பூச்சி காட்டி பயமுறுத்தி விளையாடியதைக் கொண்டாடி பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பத்துப் பாசுரங்களை கற்பவர்கள், இறுதியில் வைகுந்தம் போய் அங்கு நித்யவாசம் செய்வர்!
அடிவரவு: மெச்சு மலை காயும் இருட்டில் சேப்பூண்ட செப்பு தத்து கொங்கை பதகம் வல்லாள் - அரவணையாய்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment