||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||039 - திரு பார்த்தன்பள்ளி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1318 - 1327 - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|
அந்தாதி
ஒத்து அமரர் ஏத்தும் ஒளி விசும்பும் பாற் கடலும்*
இத்தலத்தில் காண்பு அரிய என் நெஞ்சே சித்து உணர்ந்த*
தீர்த்தன் பள்ளிக்கு இருந்து செப்ப வெளி நின்றானைப்*
பார்த்தன் பள்ளிக்குள் பணி|
- ஒத்து - என் நெஞ்சே! ஒன்று கூடி
- அமரர் - நித்யசூரிகளும், தேவர்களும்
- ஏத்தும் - துதிக்கின்ற
- ஒளி விசும்பும் - பேரொளி வடிவமான பரமபதமும்
- பால்கடலும் - திருப்பாற்கடலும்
- இ தலத்தில் - இந்தப் பூமியில்
- காண்பு அரிய - காணுதற்கு அரியனவாம்; ஆதலால், அவைகளை விட்டு
- சித்து உணர்ந்த - ஜீவாத்மாவின் உண்மை நிலையை உணர்ந்த
- தீர்த்தன் - பரிசுத்தனான பிரகலாதாழ்வான்
- பள்ளிக்கு இருந்து - பள்ளிக் கூடத்திலிருந்து பள்ளிக்கூடத்திற் படிக்கின்ற சிறுவனாயிருந்தும்
- செப்ப - தனது தந்தை வினவியதற்கு “எங்குமுளன்“ என்று மறுமொழிகூற
- வெளி நின்றானை - அது கேட்டு வெகுண்டு இரணியன் தூணைத் தட்ட அதனினின்று நரஸிங்கமாகி வெளித் தோன்றிய திருமாலை
- பார்த்தன் பள்ளிக்குள் - திருப்பார்த்தன் பள்ளி என்னும் திவ்ய ஸ்தலத்தில் சென்று
- பணி - வணங்குவாயாக
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment