||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
6. கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா|
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
- கு³ஞ்ஜா - குன்றி மணி, கிருஷ்ணர் அணியும் குன்றி மணி மாலை
- மது⁴ரா - இனிமையானது
- மாலா - அவர் அணிந்துள்ள பூமாலை
- மது⁴ரா - இனிமையானது
- யமுனா - யமுனை நதி
- மது⁴ரா - இனிமையானது
- வீசீ - யமுனை நதியின் அலைகள்
- மது⁴ரா - இனிமையானவை
- ஸலிலம் - யமுனையின் தண்ணீர்
- மது⁴ரம் - இனிமையானது
- கமலம் - தாமரை மலர்
- மது⁴ரம் - இனிமையானது
- மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
- அகி²லம் - அனைத்தும், எல்லாமே
- மது⁴ரம் - இனிமையானது
கதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. யமுனை நீர் அழகு. தாமரை மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment