||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
3. குடிலாலக ஸம்யுக்தம்
பூர்ண சந்த்³ர நிபா⁴னனம்|
விலஸத் குண்ட³ல த⁴ரம்
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||
- குடில அலக - சுருட்டைத் தலை முடியுடன்
- ஸம்யுக்தம் - கூடிய அழகு பொருந்தியவனை
- பூர்ண சந்த்³ர - முழு நிலவைப் போன்ற
- நிப⁴ ஆநநம் - ஒளிரும் திருமுகத்தை உடையவனை
- விலஸத் - பளீர் என ஒளி வீசும், பிரகாசிக்கும்
- குண்ட³ல - காதணிகளை
- த⁴ரம் - தரித்திருப்பவனை, அணிந்திருப்பவனை
- க்ருஷ்ணம் - கிருஷ்ண பரமாத்மாவை
- வந்தே³ - நான் வணங்குகிறேன்
- ஜக³த்³ - உலகத்திற்கே
- கு³ரும் - குருவாக இருப்பவரை
சுருட்டைத் தலை முடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment