About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 13 August 2026

ஸ்ரீ மதுராஷ்டகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

4. கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம்|
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • கீ³தம் - அவருடைய பாடல், கானம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • பீதம் - அவருடைய பானம், அவர் பருகுவது
  • மது⁴ரம் - இனிமையானது
  • பு⁴க்தம் - அவருடைய உணவு, அவர் உண்பது
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஸுப்தம் - அவருடைய உறக்கம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ரூபம் - அவருடைய அழகு திருவுருவம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • திலகம் - அவருடைய நெற்றித் திலகம், பொட்டு
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

உனது பாடல் அழகு. உன் பட்டாடை அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப் பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு..

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment