||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பலச்ருதி
9. க்ருஷ்ணாஷ்டக மித³ம் புண்யம்
ப்ராத ருத்தா²ய ய: படே²த்|
கோடி ஜன்ம க்ருதம் பாபம்
ஸ்மரணேன வினஸ்²யதி||
- க்ருஷ்ணாஷ்டகம் - கிருஷ்ணனைப் போற்றும் இந்த எட்டு ஸ்லோகங்கள் கொண்ட ஸ்லோகத்தை
- இ³தம் - இந்த
- புண்யம் - புண்ணியத்தைத் தரக்கூடிய, தூய்மையான
- ப்ராதஹ் - அதிகாலை வேளையில்
- உத்தா²ய - படுக்கையிலிருந்து எழுந்து
- யஹ் - எவர் ஒருவர்
- படே²த் - படிக்கிறாரோ, பாராயணம் செய்கிறாரோ
- கோடி - கோடி
- ஜன்ம - பிறவிகளில்
- க்ருதம் - செய்யப்பட்ட
- பாபம் - பாவங்கள் அனைத்தும்
- ஸ்மரணேன - இறைவனை நினைப்பதன் மூலமே
- வினஸ்²யதி - அழிகிறது, நசித்துப் போகிறது
எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!
||இதி ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் ஸம்பூரணம்||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment