||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
5. உத்பு²ல்ல பத்³ம பத்ராக்ஷம்
நீல ஜீமூத ஸன்னிப⁴ம்|
யாத³வானாம் ஸி²ரோரத்னம்
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||
- உத்பு²ல்ல – மலர்ந்த, விரிந்த
- பத்³ம – தாமரை
- பத்ர – இதழ்
- அக்ஷம் – கண்களை உடையவரை
- நீல – நீல நிறமுள்ள
- ஜீமூத – மேகத்திற்கு
- ஸன்னிப⁴ம் – ஒப்பானவரை, சமமானவரை
- யாதவா³னாம் – யாதவ குலத்தில் பிறந்தவர்களுள்
- ஸி²ரோ ரத்னம் – தலையாய ரத்தினம் போன்றவரை
- கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை
- வந்தே³ - நான் வணங்குகிறேன்
- ஜக³த்³ - உலகத்திற்கே
கு³ரும் - குருவாக இருப்பவரைமலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment