||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 154||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 16||
||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||
இந்த்ரியாணி மநோபுத்தி:
ஸத்வம் தேஜோ பலம் த்ருதி:|
வாஸுதேவாத் மகாந் யாஹூ:
க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச||
- இந்த்ரியாணி - இந்திரியங்கள் (கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐந்து ஞானேந்திரியங்கள்)
- மநோ - மனம்
- புத்திஸ் - புத்தி, நிச்சயிக்கும் திறன்
- ஸத்வம் - சத்துவ குணம், மனோபலம், அந்தக்கரணம்
- தேஜோ - ஒளி, வீரியம்
- பலம் - வலிமை
- த்ருதிஹி - தைரியம், மன உறுதி
- வாஸுதேவாத் - வாசுதேவனாகிய அந்தப் பரம் பொருளிடம் இருந்தே
- மகாந்தி - சிறந்தவைகளாக
- ஆஹூ: - சொல்லப்படுகின்றன
- க்ஷேத்ரம் - உடல், பிரகிருதி
- க்ஷேத்ரஜ்ஞ - உடலை அறிபவன், ஜீவாத்மா
- ஏவ ச - மற்றும் அவரே, பரமாத்மாவாகிய வாசுதேவரே
நம்முடைய ஐந்து இந்திரியங்கள், மனம், புத்தி, சத்துவ குணம், தேஜஸ், பலம், தைரியம், இந்த உடல் மற்றும் உடலுக்குள் இருக்கும் ஆன்மா ஆகிய அனைத்தும் வாசுதேவனிடம் இருந்தே தோன்றின, அவரே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறார். உண்மையில், க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இவ்வுடலும், க்ஷேத்திரத்தை அறிபவன் என்று அழைக்கப்படும் புத்தியுடன் கூடிய ஆன்மா ஆகியவையும் வாசுதேவனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment