||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த
ஸ்ரீ முகுந்த மாலா – 1
ஸ்ரீ வல்லபே⁴தி வரதே³தி த³யா பரேதி
ப⁴க்தி ப்ரியேதி ப⁴வலுண்ட²ன கோவிதே³தி|
நாதே²ததி நாக³ ஸ²யநேதி ஜகந்நிவாசே
த்யாளா பநம் பிரதிபத³ம் குரு மே முகுந்த³:||
- ஸ்ரீ - மகாலட்சுமி
- வல்லப⁴ - பிரியமானவர், கணவர்
- இதி - என்று
- வரத³ - வரங்களை அளிப்பவர்
- இதி - என்று
- த³யா - கருணை
- பர - உயர்ந்த, எல்லையற்ற
- இதி - என்று
- ப⁴க்தி - பக்தி
- ப்ரிய - விரும்புபவர்
- இதி - என்று
- ப⁴வ - பிறவி, சம்சாரம்
- லுண்ட²ன - கொள்ளையடித்தல், அகற்றுதல், ஒழித்தல்
- கோவித³ - வல்லவர், நிபுணர்
- இதி - என்று
- நாத² - நாதன், எஜமான், காப்பவர்
- இதி - என்று
- நாக³ - ஆதிசேஷன்
- ஸ²யந - படுக்கையாகக் கொண்டவர்
- இதி - என்று
- ஜகத் - உலகம்
- நிவாஸ - இருப்பிடம், உறைவிடம்
- இதி - என்று
- த்யாளா பநம் - திருநாமங்களை உச்சரித்தல், அழைத்தல்
- ப்ரதி பத³ம் - ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு கணமும், எப்போதும்
- குரு - செய், அருள்வாய்
- மே - எனக்கு
- முகுந்த³ - முகுந்தா! (மோட்சத்தை அருள்பவர்)
முகுந்தா! (முக்தியை அளிப்பவனே) ஸ்ரீ வல்லபா! (லக்ஷ்மி நாயகா) வரமளிக்கும் வரதா! தயாபரா! (பெரும் கருணையுடையவனே) பக்தப்ரியா! (அடியார்களுக்கு ப்ரியமானவனே) பிறவித் துன்பத்தை நீக்கும் பரந்தாமா! என்னை ஆளும் நாதா! ஆதிசேஷனாகிய மஞ்சத்தில் சயனித்து இருப்பவனே! இப்பிரபஞ்சத்தில் எங்கும் பரந்து விரிந்து உறைந்திருக்கும் ஜகந்நிவாசா! என்றெல்லாம், எப்போதும் உன் திவ்ய நாமங்களையே பாடுபவனாக (ஜபிப்பவனாக) என்னை வைப்பாயாக!
நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளையும், பகவானுடைய நாமங்களின் மகிமைகளையும் எடுத்துக் கூறுவதற்காகவே பாடப்பட்டது 'முகுந்தா மாலா' ஸ்தோத்திரம் ஆகும். இந்த 40 சுலோகங்களும் முகுந்தனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாமாலை ஆகும். இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் கண்ணனின் அழகு, கல்யாண குணங்கள், சம்சாரக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் ஜீவர்களுக்கு கண்ணனே கரை சேர்க்கும் தோணி, பிறவிப் பிணிக்கு முகுந்தனே மருந்து என பல உயர்ந்த கருத்துக்களைப் பற்றி பக்தி மணம் கமழ உரைக்கின்றன. இந்த முதல் ஸ்லோகத்தில் பல நாமங்களை எடுத்துக்கூறியுள்ளார் குலசேகரப் பெருமாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment