About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 28 November 2025

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 1

கௌசல்யா ஸுப்ரஜா இராம
பூர்வா ஸந்த்⁴யா ப்ரவர்த்ததே|
உத்திஷ்ட² நர ஸார்தூ³ல
கர்த்தவ்யம் தெ³ய்வம் ஆஹ்நிகம்|| (2) 

  • கௌசல்யா - கௌசல்யை (இராமரின் தாய்)
  • ஸுப்ரஜா - நல்ல புதல்வன், சிறந்த மகன்
  • இராம - இராமா!
  • பூர்வா - முன், ஆரம்பமான
  • ஸந்த்⁴யா - சந்தியா காலம் (விடியற்காலை நேரம்)
  • ப்ரவர்த்ததே - தொடங்குகிறது, நடைபெறுகிறது
  • உத்திஷ்ட² - எழுந்திரு
  • நர - மனிதர்களில் சிறந்தவனே, மனிதனே
  • ஸார்தூ³ல - புலி போன்ற வீரனே (சிங்கம் போன்ற பராக்கிரமம் உடையவனே)
  • கர்த்தவ்யம் - செய்ய வேண்டியது
  • தெ³ய்வம் - இறைவனுக்குரிய, தெய்வ சம்பந்தமான
  • ஆஹ்நிகம் - தினசரி கடமைகள், காலை அனுஷ்டானங்கள்

கோஸலையின் நற்புதல்வனே! மாந்தர்களில் உயர்ந்தவனே! இராமபிரானே! ஸூரியன் கிழக்குத் திக்கிலே எழுகின்ற காலைப் பொழுது ஆரம்பம் ஆகிறது. தேவர்கள் முதலானவர்களைக் குறித்துச் செய்ய வேண்டிய நித்ய கருமங்கள் அனுஷ்டாநங்கள் செய்யப்பட வேண்டும். ஆதலால் நீ உன் தம்பியுடன் துயில் எழுந்து அருள்வாயாக. வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment