||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத:
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம்
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் 1.5.13
அதோ² மஹாபா⁴க³ ப⁴வாந மோக⁴ த்³ருக்
ஸு²சி ஸ்²ரவா: ஸத்ய ரதோ த்⁴ருத வ்ரத:|
உருக் ரமஸ்யாகி²ல ப³ந்த⁴ முக்தயே
ஸமாதி⁴ நாநுஸ் மர தத்³ விசேஷ்டிதம்||
- அதோ² - இக்காரணத்தால்
- மஹாபா⁴க³ - பெரும் பாக்கியம் உடையவரே
- ப⁴வாந் ந - தாங்கள்
- அமோக⁴ த்³ருக் - வ்யர்த்தம் இல்லாத திருஷ்டி உடையவர்
- ஸு²சி ஸ்²ரவாஸ் - நற் கீர்த்தியை உடையவர்
- ஸத்ய ரதோ - உண்மையில் பற்றுடையவர்
- த்⁴ருத வ்ரதஹ - விரதங்களை அனுஷ்டித்தவர்
- அகி²ல ப³ந்த⁴ முக்தயே - ஆகையால் எல்லோருடையவும் மோக்ஷத்தின் பொருட்டும்
- உருக் ரமஸ்யா - ஸ்ரீ வாஸுதேவனது
- தத்³ விசேஷ்டிதம் - அந்த லீலா விநோதங்களை
- ஸமாதி⁴ நா - ஒன்றுபட்ட மனத்தினால்
- அநு ஸ்மர - நினைத்து வருணிப்பீராக
தாங்களோ மிகுந்த பாக்கியம் செய்தவர், பிறப்பின் பயனளிக்கும் அறிவு படைத்தவர், சிறந்த புகழ் படைத்தவர், சந்தியத்திலே நிலைநிற்பவர், சதாசார ஸம்பந்நர், விரதங்களை அனுஷ்டிப்பவர். ஆகவே, இவ்வுலகினரின் நலன் கருதி, பகவானுடைய திரு விளையாடல்களை, அவரது திருவடியினையே மனத்திற்கொண்டு விளக்கமுற வர்ணிப்பீராக!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment