||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஹஸ்தம் நக்ஷத்திரம்
1. ஸ்ரீ தேவப் பெருமாள்
2. கிடாம்பி ஆச்சான்
(பிராணார்த்திஹரன்)
- மாதம் - சித்திரை
- நக்ஷத்திரம் - ஹஸ்தம்
- அவதார ஸ்தலம் – காஞ்சிபுரம்
- ஆசார்யன் - எம்பெருமானார்
தனியன்
1. ராமாநுஜ பதாம் போஜ யுகளீயஸ்ய தீமத:|
ப்ராப்யம் சப்ராபகம் வந்தே ப்ரணதார்த்தி ஹரம் குரும்:||
2. ஆஸ்தி காக்ரே ஸரம் வந்தே பரிவ்ராட் குரு பாசகம்|
யாசிதம் குரு கேஸன ப்ரணதார்த்தி ஹரம் குரும்:||
வாழித் திருநாமம்
அந்தமில் சீர் எதிராசர் அடி தொழுதோன் வாழியே|
ஆதரம் கொள் சித்திரையில் அத்தத்தான் வாழியே|
இங்கு இதனாய் த்ரிகுலத்து அழகமர்ந்தான் வாழியே|
எதிராசர் மகாநத்தே ஏற்றம் உற்றான் வாழியே|
செந்தமிழும் வடகலையும் திகழ் நாவான் வாழியே|
சீரணி இராமாநுசன் புகழ்வோன் வாழியே|
சந்ததிக்குத் தவம் பலிக்கச் சதுர்த்தெழுந்தோன் வாழியே|
சார்வாம் கிடாம்பி ஆச்சான் தாள் இணைகள் வாழியே||
இவர் எம்பெருமானார் ஏற்படுத்திய 74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர் ஆவார். எம்பெருமானருக்கு மாமாவான பெரிய திருமலை நம்பி கிடாம்பியாச்சானுடைய அத்தையின் கணவர் ஆவார். பெரிய திருமலை நம்பியால் ராமானுஜரிடம் அறிமுகப்படுத்தப்பட்டவர். எம்பெருமானார் சிஷ்யர்களுக்குள்ளே அவருடைய திருமேனியில் மிகவும் பிரியம் உடையவர் இவரே என்று திருக்கோஷ்டியூர் நம்பியால் பரீட்சை செய்ய பெற்று எம்பெருமானாருக்கு மடைப்பள்ளி கைங்கரியம் செய்யும்படி நியமிக்கப் பெற்றார். ராமானுஜரின் சீடத்துவத்தைப் பற்றிப் பல கதைகள் இவருடன் தொடர்புடையவை. ராமானுஜரின் வாழ்விலும் போதனைகளிலும் முக்கியப் பங்காற்றிய ஒரு புகழ்பெற்ற சீடர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||



No comments:
Post a Comment