About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 12 December 2025

சித்திரை - சித்திரை - ஸ்ரீ அநந்தாழ்வான்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சித்திரை நக்ஷத்திரம்

ஸ்ரீ அநந்தாழ்வான்

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் - சித்திரை 
  • அவதார ஸ்தலம் - சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு - மைசூர் வழித்தடத்தில்)
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவேங்கடம்
  • ஆசார்யன் - அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
  • அருளிச் செய்தவை - வேங்கடேச இதிகாச மாலை, கோதா சதுஸ் ச்லோகி, ராமானுஜ சதுஸ் ச்லோகி

தனியன்
1. மேஷே சித்தா ஸமுத்பூதம் யதிநாத பதாஸ்ரிதம் ஸ்ரீ| 
வேங்கடேஸ ஸத் பக்த மநந்தார்ய மஹம் பஜே||

2. அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்|
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

3. ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீ பாத அம்போருஹத்வயம்| 
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்யம் அஹம் பஜே||

4. யதீந்திர பாதாம் புஜ சஞ்சரீகம் 
ஸ்ரீமத் தயா பால தயைக பாத்ரம்| 
ஸ்ரீ வேங்கடே ஸாங்க்ரி யுகாந்தரங்கம் நமாம் 
யநந்தார்யம் அநந்த க்ருதவ:||

வாழித் திருநாமம்
மலையில் வேங்கடவர்க்கு மாமனார் வாழியே| 
மணிச்சுடர் கோன் அநந்தன் என வந்துதித்தான் வாழியே|
உலகக்கோர் தஞ்சமென உதித்து அருள்வோன் வாழியே| 
உலகம் உண்ட மாலடியை உகந்து உய்ந்தான் வாழியே| 
இலகு சித்திரைத் தன்னில் சித்திரையோன் வாழியே| 
எந்தை எதிராசர் இணை அடியோன் வாழியே| 
அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே|
அநந்தாழ்வான் திருவடிகள் அந வரதம் வாழியே||

திருநாள் பாட்டு
திருவாளர் வேங்கட மாமலையாருக்கு சிறுதொழில் செய்தவர் நாள்| 
தேவி தனக்கருள் வேங்கட மன்னவன் மட்புட்டில் சுமப்பவர் நாள்| 
மருமலர் சோலை மகிழ்ந்திட அம்மலை மன்னி அமர்ந்தவர் நாள்| 
மன்னரவின் பூதூரவன் மாமலர் மெல்லடி ஆயவர் நாள்| 
வருபொழில் பணி தீண்டிடவும் வாடுதல் இன்றி இருந்தவர் நாள்| 
வாரி தரு சூழ் வைணவர் ஆரியர் மத்தியில் ஆண் மகன் ஆயவர் நாள்| 
அருமறை உட்பொருள் ஆழ்ந்திடு வைணவ இலக்கணம் சொன்னவர் நாள்| 
அனைவர்களும் புகழ் சித்திரையில் கிளர் சித்திரை எனும் நாளே||

மங்கள ஸ்லோகம் 
ஸ்ரீ   வேங்கடாத்திரி கமிது: 
கைங்கர்யேஷ ந்யயுங்க்த் யம்| 
ராமாநுஜார்யஸ் தஸ்மை ஸ்யாத் 
ஆநந்தார்யாய மங்களம்||

ராமானுஜரின் ஆணைப்படி, திருமலையில் உள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டார். இவரது இயற்பெயர் அனந்தன். ராமானுஜரின் சீடரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடம் கல்வி பயின்றார். இவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடம் தீட்சை பெற்று, திருமலையில் நந்தவனம் அமைத்து வாழ்ந்தவர். பகவான் மற்றும் பாகவதர்களிடம் அதீத பக்தி கொண்டவர். 

அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர். எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி  ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார். எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார். அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார். எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக் கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment