||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஓராண் வழி ஆசார்யர்கள் என்பது ஒரு ஆசாரியன் ஒரு சிஷ்யன் என்று ஒரு பரம்பரையாக இந்த சம்பிரதாயம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதைத் தான் ஒராண் வழி ஆசார்யர்கள் என்று பெரியோர்கள் காட்டுகிறார்கள்.
முதல் ஆசார்யன் பெரிய பெருமாள். பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், சேனை முதலியார் இவர்கள் மூவருமே பரமபதத்தில் வசிக்கக் கூடியவர்கள். அதற்குப்பிறகு இந்த உலகத்தில் வந்து அவதரித்த ஆசார்யர்கள் பலர்.
ஓராண் வழி ஆசார்யர்கள்
- 1. பெரிய பெருமாள்
- 2. பெரிய பிராட்டி
- 3. விஷ்வக்ஸேனர் (ஸேனை முதலியார்)
- 4. நம்மாழ்வார் (ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்று அறியப்படுபவர். சரணாகதி செய்யக் கூடியவர்களுக்கு தலைவராக இருப்பவர் என்று பெருமை கொண்டவர்)
- 5. நாதமுனிகள் (ஸ்ரீரங்கநாத முனி)
- 6. உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்)
- 7. மணக்கால் நம்பி
- 8. ஆளவந்தார் (யாமுனாசார்யர்)
- 9. பெரிய நம்பி (மஹா பூர்ணர்)
- 10. எம்பெருமானார் (ஸ்ரீ ராமானுஜர்)
- 11. எம்பார் (கோவிந்தப் பெருமாள்)
- 12. பராசர பட்டர்
- 13. நஞ்சீயர் (வேதாந்தி)
- 14. நம்பிள்ளை (லோகாசார்யர்)
- 15. வடக்குத் திருவீதிப் பிள்ளை (ஸ்ரீ க்ருஷ்ண பாதர்)
- 16. பிள்ளை லோகாச்சார்யர்
- 17. திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீ சைலேசர்)
- 18. மணவாள மாமுனிகள் (ரம்யஜாமாத்ரு முனி)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்



No comments:
Post a Comment